எதிர்க்கட்சித் தலைவர், இந்திய தூதுவர் இடையே சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச மற்றும் இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பில்   இடம்பெற்றது.

பொருளாதார, சமூக, மற்றும் அரசியல் விவகாரங்கள் பல குறித்து இதன்போது இருவரும் நீண்ட நேரம் கலந்துரையாடியதோடு, அருகிலுள்ள அண்டை நாடு என்ற வகையில் பல தசாப்தங்களாக இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் தனது நன்றியை இதன்போது தெரிவித்தார்.

அவ்வாறே, நமது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை வெற்றி கொண்டு,  அவர் கோரிக்கை விடுத்தார்.