Home செய்திகள் ஐ.நா.சபையின் உதவி பொதுச் செயலாளர் மற்றும் ஜீ.எல்.பீரிஸுக்கிடையில் சந்திப்பு

ஐ.நா.சபையின் உதவி பொதுச் செயலாளர் மற்றும் ஜீ.எல்.பீரிஸுக்கிடையில் சந்திப்பு

உதவி பொதுச் செயலாளர் மற்றும் ஜீ.எல்.பீரிஸுக்கிடை

பயங்கரவாத தடைச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் உட்பட, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக உள்நாட்டு செயன்முறைகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றம் தொடர்பில்  ஐ.நா. சபையின் உதவி பொதுச் செயலாளரிடம் வெளிவிவகார அமைச்சர்  ஜீ.எல்.பீரிஸ்  விளக்கமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொதுச் செயலாளர் காலித் கியாரி(Khaled Khiari)  அமைச்சர்  ஜீ.எல்.பீரிஸை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

ஐ.நா.சபையின் உதவி பொதுச் செயலாளர் மற்றும் ஜீ.எல்.பீரிஸுக்கிடையிலான சந்திப்பின் போது, தொற்று நோய்க்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார சவால்கள் மற்றும் இலங்கையின் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்து கொள்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் உள்ளிட்டவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைசட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் உட்பட , நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக உள்நாட்டு செயன்முறைகளில் ஏற்பட்டுள்ள சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் பேசப்பட்டுள்ளதக கூறப்பட்டுள்ளது.

 இலங்கை தாமதமாக முன்வந்து ஏற்றுக் கொண்ட சர்வதேச கடமைகளுக்கு அமைவாக , நிலையான சமாதானத்தையும் அபிவிருத்தியையும் அடைந்து கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைக்கும் என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்   தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version