Home செய்திகள் இலங்கைக்கான புதிய UNDP வதிவிடப் பிரதிநிதி அலி சப்ரியை சந்திப்பு

இலங்கைக்கான புதிய UNDP வதிவிடப் பிரதிநிதி அலி சப்ரியை சந்திப்பு

194 Views

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்திற்கான (UNDP) இலங்கைக்கான புதிய வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா இன்று தனது நற்சான்றிதழ்களை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் கையளித்துள்ளார்.

இலங்கையில் அவர் நியமனம் செய்யப்படுவதற்கு முன்னர், குபோடா பூட்டானில் உள்ள UNDP இல் வதிவிடப் பிரதிநிதியாக நான்கு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். அங்கு அவர் UNDP ஐ மிகவும் வேகமான, புதுமையான சிந்தனைத் தலைவராக மாற்றுவதற்கு பூட்டான் நாட்டு அலுவலகத்தின் பணிகளுக்கு தலைமை தாங்கினார்.

பூட்டானில் UNDP இல் பணிபுரிவதற்கு முன்னர், குபோடா சாலமன் தீவுகளில் UNDP இன் முகாமையாளராகவும் அலுவலகத்தின் தலைவராகவும் மற்றும் UNDP, UNICEF, UNFPA மற்றும் UNWOMEN ஆகியவற்றிற்கான UN கூட்டு இருப்பு முகாமையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

அவர் முன்னர் UNDP லாவோ PDR (2014-2016) மற்றும் மாலைத்தீவுகள் (2011-2014) ஆகியவற்றின் துணை வதிவிடப் பிரதிநிதியாக (திட்டம் மற்றும் செயற்பாடுகள்) பணியாற்றியுள்ளார். அவர் நியூயார்க்கில் (2006-2011) UNDP மதிப்பீட்டு அலுவலகத்திலும் இருந்தார், அங்கு அவர் பல நாடுகளில் UNDP இன் பங்களிப்பு மற்றும் உலகளாவிய கருப்பொருள் மதிப்பீடுகளின் நாடு அளவிலான மதிப்பீடுகளுக்கு தலைமை தாங்கியுள்ளார்.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version