விடுப்புக் கேட்டு விண்ணப்பித்துள்ள நளினிக்கு மருத்துவப் பரிசோதனை

நளினிக்கு மருத்துவப் பரிசோதனை: தனக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்காக ஒரு மாத காலம் விடுப்பு வழங்கக் கோரி, நளினி தமிழக முதல்வருக்கு கடந்த 23-ஆம் திகதி மனு அனுப்பியிருந்தார். இதனையடுத்து, நளினிக்கு வேலூர் அரசு மருத்துவமனையில் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டது. இந்த மருத்துவ பரிசோதனை அறிக்கை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் தனிச் சிறையிலும் கடந்த 30 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர். தனக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்காக ஒரு மாத காலம் விடுப்பு வழங்கக் கோரி தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பியதைத் தொடர்ந்து, நளினியின் உடல்நிலையை பரிசோதனை செய்திட சிறை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கமைய, வேலூர் பெண்கள் தனிச்சிறையில் இருந்து நளினி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.45 மணியளவில் வேலூர் பெண்ட்லென்ட் அரசு மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு இரத்த அழுத்தம், இ,சி.ஜி., கர்ப்பப்பை பரிசோதனை, எலும்பு சிகிச்சை பிரிவு, பல் சிகிச்சை பிரிவிலும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மதியம் ஒரு மணிவரை இந்த பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு அவர் மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அடுத்த தலைமுறையால் வழிநடத்தப்பட்ட தலிபான்களின் படை நடவடிக்கை – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

நளினிக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றதையொட்டி காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் மருத்துவமனை வளாகம் முழுவதும் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். நளினி ஒரு மாதம் விடுப்புக் கேட்டு முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்ததன் காரணமாக அவருக்கு உடல்நிலை குறித்து பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவரது உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ilakku-weekly-epaper-144-august-22-2021