மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் -முள்ளிவாய்க்கால் நோக்கிய நீதி கோரும் பயணமும் அஞ்சலியும்

முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் இன விடுதலை தேடி முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது.

யாழ்ப்பாணம், வடமராட்சி – வல்வெட்டித்துறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட பயணம் நேற்று (16) மாலை கிளிநொச்சியை வந்தடைந்தது. முள்ளிவாய்க்கால் நோக்கி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம்

அத்டதுடன் பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான மற்றொரு மக்கள் பேரணி வவுனியாவை வந்தடைந்ததுள்ளது. வவுனியா மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட  முள்ளிவாய்க்கால் கஞ்சி அனைவருக்கும் பகிரப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம்

அங்கிருந்து மாங்குளம் ஊடாக நாளையதினம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் நோக்கி செல்லவுள்ளது

பேரணியில் மதகுருமார்கள், சமூக ஆர்வலர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதே நேரம் தமிழினப் படுகொலை நினைவேந்தல் வாரத்தின் ஆறாம் நாளில் புதுக்குடியிருப்பு மந்துவில் சந்தியில் அஞ்சலி.