Home செய்திகள் படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் துயிலும் இல்லங்களிலும் சுடரேற்றப்பட்டன

படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் துயிலும் இல்லங்களிலும் சுடரேற்றப்பட்டன

படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் துயிலும் இல்லங்களிலும் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

படையினரின் கெடுபிடிகளுக்கு மத்தியில்முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேவிபுரம் துயிலும் இல்லம்

மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரம் பகுதியில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான மக்களை சுடர் ஏற்றி வணக்கம் செலுத்த பொலீசார் அனுமதி வழங்கினார்கள்.

துயிலும் இல்லத்திற்குள் அனுமதிக்கப்பட்ட ஒருசிலரை மாத்திரம் நினைவேந்தல் மேற்கொள்ள பொலீசார் அனுமதித்ததுடன் ஏனைய நபர்களையோ ஊடவியலாளர் களையோ அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

மட்டக்களப்பில் தமிழீழத் தேசிய  மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டது

படையினரும் பொலிஸாரும் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதிலும்  மட்டக்களப்பில் மக்கள் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர்.

முல்லைத்தீவு -இரட்டைவாய்க்கால் துயிலுமில்லம் 

முல்லைத்தீவு – இரட்டைவாய்க்கால் துயிலு மில்லத்தில்  தமிழீழத் தேசிய  மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டது.

படையினரும் காவல்துறையினரும் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக் கைகளில் ஈடுபட்ட போதிலும் அவர்களின் தடைகளையும்  உடைத்து  மக்கள் மாவீரர் களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளனர்.

வன்னிவிளாங்குளம்  மாவீரர் துயிலும் இல்லம்

வன்னிவிளாங்குளம்  மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் மதிவாணனின் தந்தை பொதுச் சுடரினை ஏற்றி வைத்தார். துயிலுமில்ல வளாகத்தில் இருந்த பொலிசார்  அனைவரையும் அஞ்சலி செய்ய துயிலுமில்ல வளாகத்துக்குள் அனுமதி வழங்கவில்லை. நூற்றுக் கணக்கானோர் வீதியில் நின்றே அஞ்சலி செலுத்தினர். புகைப்படம் எடுக்க அனுமதிக்கப்படவில்லை என்பதோடு  ஊடகவியலாளர் களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது

குறித்த நினைவேந்தல் நிகழ்வில்  பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள்   பலர் பங்கேற்று அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

யாழ்ப்பாணம் சாட்டி மாவீரர் துயிலும் இல்லம்

யாழ்ப்பாணம் சாட்டி மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் இராணுவத்தினருக்கும் மக்களுக்கும் இடையில் குழப்ப நிலை ஏற்பட்டது.

மாவீரர் நினைவேந்தலுக்காக சுடரேற்றச் சென்றிருக்கின்ற மக்களை உள்ளே செல்ல விடாது இராணுவத்தினர் தடுத்து வைத்திருந்ததால் குழப்ப நிலை ஏற்பட்டது.

மக்களுடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் சட்டத்தரணி சுகாஸூம் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

இறுதியில் இராணுவத்தினரும், காவல்துறையினரும் சூழ இருந்த வண்ணமே மாவீரர் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Exit mobile version