கொக்காவில் பகுதியில் தொடரும் பாரிய கிரவல் அகழ்வு

received 853475225288250 கொக்காவில் பகுதியில் தொடரும் பாரிய கிரவல் அகழ்வு

கொக்காவில் பகுதியில் தொடரும் பாரிய கிரவல் அகழ்வு தொடர்பாக  அதிரடியாக களத்தில் இறங்கிய அதிகாரிகள் 6 கனரக இயந்திரங்களையும்  9 பேரையும் கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்காவில் பிரதேசத்தில் மிக பாரியளவில் கிரவல் அகழ்வு இடம் பெற்று வருவதோடு பாரிய வனப் பகுதியும் அழிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த விடயங்கள் தொடர்பில் பல்வேறு கலந்துரையாடல்களில் கலந்துரையாடப் பட்டாலும் எந்தவித தீர்வு களுமின்றி குறித்த கிரவல் அகழ்வு தொடர்ச்சியாக இடம் பெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று காலை குறித்த கொக்காவில் பகுதிகளில் புவிச் சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன் போது கொக்காவில் பகுதியில் இடம் பெற்ற கிரவல் அகழ்வை பார்வையிட்ட போது, அங்கு சட்ட வரம்புகள் மீறப்பட்டு பாரிய அளவில் கிரவல் அகழ்வு இடம் பெற்றிருந்துள்ளது. அதே நேரம் கிரவல் அகழ்வு பத்திர அனுமதிகளை சட்ட முரணாக  பயன்படுத்தி யுள்ளதையும் அவதானித்துள்ளனர்.

இதையடுத்து,  புவிச் சரிதவியல் திணைக்கள  அதிகாரிகள் செய்த முறைப் பாட்டுக்கு அமைய, ஐயன்கன்குளம்  காவல் துறையினர் கிரவல் அகழ்வு மற்றும் கொண்டு செல்வதற்காகப் பயன் படுத்தப்பட்ட ஆறு கனரக இயந்திரங்கள் அதன் சாரதிகள்  6 பேர் மற்றும் அனுமதிப் பத்திர உரிமையாளர்கள் மூவர் உள்ளடங்கலாக 9 பேரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப் பட்டவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஐயன்கன் குளம் காவல் துறையினர் இவர்களுக் கெதிராக நீதிமன்று ஊடாக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் குறித்த செயற்பாடுகளுடன் தொடர்புடைய மேலும்  5 வாகனங்களில் ஏற்றப் பட்டிருந்த மண்ணை பறித்து விட்டு அந்த வாகனங்கள் மற்றும் சாரதிகளை காவல் துறையினர் விடுவிக்கப் பட்டுள்ளமையும் குறிப்பிடத் தக்கது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 கொக்காவில் பகுதியில் தொடரும் பாரிய கிரவல் அகழ்வு