முகக்கவசம் இனி கட்டாயம் அல்ல: கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் பிரிட்டன்

முகக்கவசம் இனி கட்டாயம் அல்ல

முகக்கவசம் இனி கட்டாயம் அல்ல: பிரிட்டனில்  கொரோனா தொற்று குறைய தொடங்கியதையடுத்து, அங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து  பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் பேசும்போது , ”பிரிட்டனில்  கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து கட்டுப்பாடுகளைத் தளர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இரவு விடுதிகள், பார்கள், ரெஸ்டாரண்ட்கள் உள்ளிட்டவை மீண்டும் திறக்கப்படும். பணியாளர்கள் அலுவலகங்களுக்கு வந்து பணி செய்யலாம்.

முகக்கவசங்கள் இனி கட்டாயம் இல்லை. எனினும், நெரிசலான இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது நல்லது. மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை. வரும் வியாழக்கிழமை முதல் இந்த தளர்வுகள் நடைமுறைக்கு வரும்” என்றார்.