தியாகி திலீபன் மாபெரும் அகிம்சை போராட்டத்தை ஆரம்பித்த நாள் இன்று

மாபெரும் அகிம்சை போராட்டத்தை ஆரம்பித்த நாள் இன்று

இலங்கை – இந்திய அரசுகளிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, தியாகி திலீபன், தமிழீழ விடுதலையில் மாபெரும் அகிம்சை போராட்டத்தை ஆரம்பித்த நாள் இன்று.  இன்று இந்தப் போராட்டம், 34 வருடங்களை நிறைவு செய்திருக்கின்றது.

இந்தியப் படை தமிழர் தாயகத்தில் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் நீர் கூட அருந்தாமல் அவர் இந்தப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

திலீபன் 34 வருடங்களுக்கு முன்னர் முன்வைத்த இந்தக் கோரிக்கைகள் இன்றும் கூட நிறைவேற்றப்படாமலிருப்பது கவனிக்கத்தக்கது.

தியாகி திலீபன் முன்வைத்த ஐந்து கோரிக்கைகள்…

1). மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

2). சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.

3). அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.

4). ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.

5). தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.

ilakku-Weekly-Epaper-146-September-05-2021