ஏராளமானோர் வெளியேறுகின்றனர்: மியன்மாரின் முக்கிய நகரத்திலிருந்து பல புத்த பிக்குகள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரில் சென்ற ஆண்டு நடந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிராக இராணுவம், போராளிக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கடுமையான சண்டையால் தங்கள் வசிப்பிடங்களைவிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறினர்.
கடந்த வாரம் கிழக்கு மியன்மாரின் கயா மாநிலத்தில் உள்ள லோய்காவ் நகரத்தில் கடுமையான சண்டை நடந்தது. அதனைத் தொடர்ந்து புத்த பிக்குகள் உட்பட அந்நகரில் வசித்த பாதிக்கும் மேற்பட்டவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக ஐநா கூறியது.