Tamil News
Home செய்திகள் மன்னார் :“ஆற்றல்“ நுண்கலைக் கல்லூரியின் மனவளக்கலை பயிற்சி- ஆர்வத்தோடு பங்கேற்ற மாணவர்கள்

மன்னார் :“ஆற்றல்“ நுண்கலைக் கல்லூரியின் மனவளக்கலை பயிற்சி- ஆர்வத்தோடு பங்கேற்ற மாணவர்கள்

மன்னார் அடம்பனில் இயங்கும் “ஆற்றல்“ நுண்கலைக் கல்லூரி கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட போதும் அது தனது கல்விச் செயற்பாட்டை மிக வேகமாக தொடர்ந்து வருகின்றது. பல செயற்திட்டங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் இக்கல்லுாரி  கலைத் துறையை தெரிவு செய்யும் மாணவர்களை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், மன்னார் அடம்பனில் இயங்கும் “ஆற்றல்“ நுண்கலைக் கல்லூரியின் மேலுமொரு சமூகச் செயற்பாடாக மனவளக்கலை பயிற்சி நடைபெற்று வருகின்றது.

இது தொடர்பாக ஆற்றல் நுண்கலைக்கல்லுாரியின் செய்திக் குறிப்பில்,

“இம்மாதம் (2022 நவம்பர்) 4,5,6 ஆம் திகதிகளில் ஆரம்பிக்கப்பட்ட மனவளக்கலை பயிற்சிகள் இணையவழிமூலம் தொடரும். மனவளக்கலை மன்ற, யாழ் அறக்கட்டளையின் ஆசிரியத்துவத்தோடும் அரியாலை உதவும் கரங்கள் அமைப்பினரின் நிதியனுசரணையோடும் வி.கேன் மாந்தை மேற்கு மாற்றுத் திறனாளிகள் அமைப்பும் ஆற்றல் நுண்கலைக் கல்லூரியும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளனர்.

மனவளக்கலை யோகாப் பயிற்சியி, உடற்பயிற்ச்சி, காயக்கல்ப பயிற்சி செய்முறையும் வழங்கப்பட்டது. மன்/அடம்பன் மத்திய மகாவித்தியாலய மணவர்கள் 50 பேரும் கல்வியார்வத்துக்கான பயிற்சிகளைப் பெற்றனர். மூன்று நாட்கள் பயிற்சி பெற்றவர்கள் தமது சிறுவர்களுக்காகவெனக் கோரியதற்கமைய மேலும் 10 சிறுவர்கள் கல்வியூக்கத்துக்கான ஒரு மணித்தியாலப் பயிற்சிகளைப் பெற்றனர்.

இம்மேலான பயிற்சிகளை மனவளக்கலை பேராசிரியர் திருமதி அருளேஸ்வரி வேதநாயகம் அம்மா அவர்களும் துணைப்பேராசிரியர் திரு.ஞானகாந்தன் அவர்களும் யாழ் மண்டல தலைவர் திரு. குழந்தைவேல் அவர்களும் மனவளக்கலை துணைப் பேராசிரியர் கலாநிதி அவர்களும் மனவளக்கலை ஆசிரியர் சங்கீதா அவர்களும் வழங்கினர்.

இதன் தொடர் நிகழ்வாக ஆர்வமும் தேவையும் உள்ளவர்களுக்காக இரண்டாவது குழுவினருக்கான பயிற்சியும் வழங்கப்படவுள்ளது”.

அற்றல் நுண்கலைக்கல்லுாரி கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version