முக்கிய வைத்தியசாலைகள் நோயாளர்களால் நிரம்பின; ஒட்சிசனுக்கு பெரும் தட்டுப்பாடு

முக்கிய வைத்தியசாலைகள் நோயாளர்களால் நிரம்பின முக்கிய வைத்தியசாலைகள் நோயாளர்களால் நிரம்பின: இலங்கையில் கொழும்பு உள்ளிட்ட நாட்டிலுள்ள முக்கிய வைத்தியசாலைகள் அனைத்தும் கொரோனா நோயாளர்களால் நிரம்பி வழிகின்றதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

இந்த நோயாளர்களில் பெரும்பாலானோருக்கு ஒட்சிசன் தேவை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். கொரோனா நோயாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்ட்களுக்கப்பால் மேலும் சில வார்ட்களை நிர்மாணிப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

த.தே.கூட்டமைப்பின் இரட்டையர்களின் போக்கு தமிழர் நிலையில் ஒரு கேள்வி ஏற்படுகின்றது! | ILC

அத்தோடு, வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட வைத்தியசாலை சுகாதாரப் பிரிவினர் அதிகமானோர் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 700 நோயாளர்களும் தொற்று நோயியல் பிரிவில் (ஐ.டி.எச்.) 240 நோயாளர்களும் காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் 222 நோயாளர்களும் களுபோவில வைத்தியசாலை யில் 300 நோயாளர்களும் வெலிசற வைத் தியசாலையில் 182 நோயாளர்களும் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலை பணிப் பாளர்கள் தெரிவித்தனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்கள் உள்ளிட்ட வைத்தியசாலை சுகாதாரப் பிரிவினர் 350 பேர் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளா கியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் 24 கட்டில்கள் மாத்திரமே இருந்தாலும் இதுவரை 30 கொரோனா நோயாளர்கள் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நாளாந்தம் சாதாரணமாக 10 – 15 நோயாளர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழப்பதாகவும் வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவித்தன

ilakku-weekly-epaper-144-august-22-2021