மகிந்தவின் பதாகைககள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தீவைத்து எரிப்பு

மகிந்தவின் பதாகைககள்

மகிந்தவின் பதாகைககள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் தீவைத்து எரிப்பு

யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுசுக்கு எதிர்ப்புத் தெரிவிகும் வகையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அவரது பதாகைகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திற்க்கு இரண்டு நாள் பயணமாக நேற்றைய தினம் வருகைதந்த  மகிந்த ராஜபக்சே இன்று காலை மட்டுவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தினை திறந்து வைத்தார்.

குறித்த நிகழ்வுக்கு மகிந்த வருவதனை எதிர்த்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உள்ளிட்டோர் எதிர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க முயன்றனர்.

நிகழ்வு நடைபெறும் இடத்தில் போராட்டத்தினை முன்னெடுக்க முல்லைத்தீவில் இருந்து வந்திருந்தவர்களை மட்டுவில் அம்மன் ஆலயத்திற்கு அருகில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

அதேவேளை யாழில் இருந்து சென்ற வேலன் சுவாமிகள் உள்ளிட்டோரையும் மட்டுவில் வண்ணாத்தி பாலம் பகுதியில் காவல்துறையினர்  தடுத்து நிறுத்தி இருந்தனர்.

இந்நிலையில் நிகழ்வினை முடித்துக்கொண்டு மகிந்த நிகழ்விடத்தில் இருந்து புறப்பட்டபின்னரே எதிர்புபோராட்டத்திற்கு வந்தவர்களை காவல்துறையினர் செல்வதற்கு அனுமதித்தனர்.

அதனை அடுத்து வாகனத்தில் இருந்து இறங்கிய வலிந்து  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர், மகிந்தவை வரவேற்று கட்டப்பட்டு இருந்த பதாகைகளை கிழித்து, வீதியில் தீயிட்டு எரித்து தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tamil News