சிறையிருந்த மாவைக்கும் காசிக்கும் பிணை வழங்கியதால் மட்டக்களப்பில் இருந்து மாற்றப்பட்டேன்-விக்கி

ஒன்றரை வருடங்களாக சிறையிருந்த இருவருக்கு பிணை வழங்கியதன் காரணமாக என்னை மட்டக்களப்பிலிருந்து சாவகச்சேரிக்கு உடனடியாக மாற்றிவிட்டார்கள். இவற்றுக்கு காரணம் அரசியலாகும். சிறையிலிருந்த அந்த இருவரில் ஒருவர் மாவை சேனாதிராஜா,மற்றையவர் காசி ஆனந்தன் ஆவார் பிணை வழங்கியதன் காரணமாக என்னை மட்டக்களப்பிலிருந்து சாவகச்சேரிக்கு உடனடியாக மாற்றிவிட்டார்கள். இவற்றுக்கு காரணம் அரசியலாகும். சிறையிலிருந்த அந்த இருவரில் ஒருவர் மாவை சேனாதிராஜா,மற்றையவர் காசி ஆனந்தன் ஆவார். என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற வேட்பாளர்களை ஆதரிக்கும் கூட்டமும் தேர்தல் பரப்புரை அலுவலக திற்பு விழாவும் நேற்று மாலை கிரான்குளத்தில் நடைபெற்றது.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைமை வேட்பாளர் சோ.கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர்கள் ஆதரவாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய விக்னேஸ்வரன்,

நான் மட்டக்களப்பிற்கு புதியவனல்ல.1978ஆம் ஆண்டு மாவட்ட நீதிபதியாக இருந்தவன் ஆவேன்.அந்த காலகட்டத்தில் இரண்டு தமிழ்ப் போராளிகள் நெடுங்காலமாக அவர்களுக்கு எதிராக வழக்குகள் பதியப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்கள்.

அந்த சமயம் நான் அங்கு வந்தபோது அவர்களுக்கு பிணை வழங்கக்கூடாது என்று அரசியல் ரீதியாக பலரும் வந்து எனக்குக் கூறினார்கள். நான் முதன்முதலாக மட்டக்களப்பிற்கு தான் நீதிபதியாக வந்துள்ளேன்,சட்டத்தின்படி நான் உரிய நடவடிக்கை எடுப்பேன் என அவர்களிடம் கூறினேன்.

இரண்டு போராளிகளும் எந்த விதமான வழக்குகளும் அவர்களுக்கு எதிராக பதியப்படாமல் சுமார் ஒன்றரை வருடங்களாக சிறையில் இருந்தார்கள்.நான் அரச சட்டத்தரணிக்கு மூன்று வாரங்கள் அவகாசம் கொடுத்து உடன் அவர்களுக்கு எதிரான வழக்கை பதிவு செய்யுங்கள் அல்லது அவர்களுக்கு பிணை வழங்குங்கள் என்று கூறினேன்.

மூன்று வாரங்கள் கழிந்த பின்னர் அவர்களுக்கு எதிராக வழங்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. நான் அவர்களுக்கு பிணையளித்தேன். அவர்களுக்கு பிணை வழங்கியதன் காரணமாக என்னை மட்டக்களப்பிலிருந்து சாவகச்சேரிக்கு உடனடியாக மாற்றிவிட்டார்கள். இவற்றுக்கு காரணம் அரசியலாகும். சிறையிலிருந்த அந்த இருவரில் ஒருவர் மாவை சேனாதிராஜா,மற்றையவர் காசி ஆனந்தன் ஆவார் என விக்னேஸ்வரன் என விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்