குறைவான ஊதியம் மோசமான நிலைமைகள்: அவுஸ்திரேலியாவில் பாதிக்கப்படும் வெளிநாட்டு தொழிலாளர்கள் 

குறைவான ஊதியம் மோசமான நிலைமை


அவுஸ்திரேலிய
பண்ணைகளில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் குறைவான ஊதியம் மோசமான நிலைமைகளுக்கு இடையில் பணியாற்றுவதாகவும் அண்மையில் ஒரு வெளிநாட்டு தொழிலாளர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாகவும் ஆஸ்திரேலிய மேலவையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

பெருங்கனவுகளுடன் சீனாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு சென்ற Xueliang Wang எனும் புலம்பெயர் தொழிலாளி, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பழங்கள் பறிப்பவராக பணியாற்றி வருகிறார். கொசு மற்றும் பூச்சுக்கடிகளுக்கு இடையில், தினமும் 11 மணிநேரம் பணியாற்றும் 58 வயதான அவருக்கு மணிக்கு 10 டாலர்கள் சம்பளமாக வழங்கப்படுகிறது.

Xueliang Wang அவரது மனைவியுடன் தங்கியுள்ள கண்டெய்னர் வடிவ தங்குமிடத்துக்கு வாரம் 75 டொலர்கள் செலுத்தி வேண்டியிருக்கிறது.

இந்த நிலையில், அவுஸ்திரேலிய மேலவையின் பணிப் பாதுகாப்பு குழு, அவுஸ்திரேலிய பண்ணைகளில் உள்ள மோசமான நிலைமைகள் குறித்து கேட்டறிந்து உள்ளது.

அப்போது, மொழிப்பெயர்ப்பாளர் வாயிலாக அக்குழுவிடம் பேசிய Wang, “பண்ணையில் பணியாற்றும் பொழுது வெளி நபர்களுடன் இங்கு கொடுக்கப்படும் சம்பளம் பற்றியோ நிலைமை பற்றியோ பேசக்கூடாது என பண்ணை முதலாளி தெரிவித்திருக்கிறார்.”

முதலில் இப்பண்ணை வேலைக்கு மணிக்கு 17 டொலர்கள் வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது.  ஆனால் Wang காலை 6 மணியிலிருந்து இருள் பொழுது வரை பணியாற்றியும் கூட அவருக்கு அச்சம்பளம் வழங்கப்படாமல் உழைப்புச் சுரண்டலுக்கு ஆளாகியுள்ளார்.

கடந்த 2013 முதல் 2018 இடையிலான காலகட்டத்தில் ஆசியா, மற்றும் ஐரோப்பா நாடுகளில் இருந்து சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் பெரும் உழைப்பு சுரண்டலுக்கு ஆளாகி இருந்ததாகக் கூறியிருக்கிறார் Deakin பல்கலைக்கழக ஆய்வாளர் Elsa Underhill.

 

ilakku Weekly Epaper 151 october 10 2021 Ad குறைவான ஊதியம் மோசமான நிலைமைகள்: அவுஸ்திரேலியாவில் பாதிக்கப்படும் வெளிநாட்டு தொழிலாளர்கள்