Home செய்திகள் திருகோணமலை-கிண்ணியாவில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பு

திருகோணமலை-கிண்ணியாவில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருப்பு

310 Views

கிண்ணியாவில் எரிபொருளுக்காக நீண்ட வரிசை

கிண்ணியாவில் எரிபொருளுக்காக நீண்ட வரிசை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் நிலை காரணமாக எரிபொருள் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. திருகோணமலை கிண்ணியா முனைச்சேனையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று (17) நீண்ட வரிசை காணப்பட்டது.

சுமார் மூன்று நாட்களின் பின் பெற்றோல் விநியோகம் இடம் பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இரு வெவ்வேறு வரிசை நின்று பல மணி நேரம் காத்திருந்து பெற்றோலினை பெறவேண்டி உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்தும் இந்த காத்திருப்பு நிலை காணப்பட்டால் தங்களது அன்றாட தொழில் நடவடிக்கைகளும் இதன் மூலமாக பாதிப்படைவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த எரிபொருள் பற்றாக்குறைக்கான தீர்வு எப்போது கிட்டும் எனவும் அங்கலாய்க்கின்றனர்.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version