சுவிட்சர்லாந்தை வந்தடைந்த ‘Little Amal’

சுவிட்சர்லாந்தை வந்தடைந்த Little Amal

சுவிட்சர்லாந்தை வந்தடைந்த ‘Little Amal’: பெற்றோரைப் பிரிந்த இளம் அகதிகளை நினைவுகூரும் ஒரு நிகழ்வு

Little Amal யாரென்று உங்களுக்குத் தெரியுமா?

Little Amalக்கு 9 வயதாகிறது. அவள் சிரியாவின் Aleppoவைச் சேர்ந்த ஒரு அகதி. சிரிய துருக்கி எல்லையிலிருந்து, அவள் பிரித்தானியாவின் மான்செஸ்டரை நோக்கி 8,000 கிலோமீற்றர்கள் நடந்தே பயணிக்கிறாள் அவள்.

அகதிக் குழந்தையான அவள், தன் பெற்றோரை தவறவிட்டுவிட்டாள். அவர்களைத் தேடி நாடு நாடாக பயணம் செய்துவருகிறாள் Little Amal. போகும் இடமெல்லாம் குழந்தைகள் அவளை ஆவலாக வரவேற்கிறார்கள். அவளுக்காக நடனம் ஆடுகிறார்கள், அவளது கைகளை ஆவலாக தொட்டுப் பார்க்கிறார்கள்.

உண்மையில் Little Amal என்பது மூன்றரை மீற்றர் உயரமுள்ள ஒரு பொம்மை. பெற்றோரைப் பிரிந்த அகதிக் குழந்தைகளின் அவல நிலையை விளக்குவதற்காக உருவாக்கப்பட்ட பொம்மை அது.

ilakku.org/ilakku-weekly-epaper-149-september-26-2021