11 கட்சிகளின் தலைவர்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்பர்- பொது உடன்படிக்கையும் கைச்சாத்தாகும்

பொது உடன்படிக்கையும் கைச்சாத்தாகும்
தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் 11 கட்சிகளின் தலைவர்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்பர். அத்துடன்  செவ்வாய்க்கிழமை கொழும்பில் கூடிப் பேசுவதுடன் பொது உடன்படிக்கையும் கைச்சாத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ கட்சியின் அழைப்பின் பேரில் 13ஆவது திருத்தச் சட்டத்தை இலங்கை அரசாங்கம் முழு மையாக நடைமுறைப்படுத்துவதை இந்தியாவை உறுதி செய்யுமாறு கோரி பொதுஉடன்பாடு ஒன்றை ஒட்டி கடிதம் ஒன்றை அனுப்புவதற்காக கூடி பேசுவது டன், அதில் கையொப்பமிடவும் உள்ளன.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரு மான இரா. சம்பந்தன், தமிழ் முற்போக் குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இலங்கை தமிழ் அரசுக் கட்சி யின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலை வர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக் கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியு தீன், ரெலோ கட்சியின் தலைவர் செல் வம் அடைக்கலநாதன், புளொட் கட்சி யின் தலைவர் த. சித்தார்த்தன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பங்காளிக் கட்சிகளான மலையக மக்கள் முன்னணி யின் தலைவர் வே. இராதகிருஷ்ணன், மற்றும் தேசிய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பழினி திகாம்பரம், ஈ. பி. ஆர். எல். எவ்வின் தலைவர் சுரேஷ் பிறேமசந் திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலை வர் என். ஸ்ரீகாந்தா ஆகியோருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சா ளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டது.

Tamil News