உணவு நெருக்கடிக்கு தீர்வாக விசேட பயிர்ச் செய்கை வேலைத்திட்டம் ஆரம்பம்

விசேட பயிர்ச் செய்கை வேலைத்திட்டம்

உணவு நெருக்கடிக்கு தீர்வாக அரசால் பயன்படுத்தப்படாத வயல்கள் மற்றும் காணிகளை பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தும் விசேட வேலைத்திட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

இதன்படி, மேல் மாகாணத்தில், காணி மீட்பு கூட்டுத்தாபனத்தின் கீழ் உள்ள அடையாளம் காணப்பட்ட 283 ஏக்கர் நிலப்பரப்பு பயிர்ச்செய்கை நடவடிக்கைகாக ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் ஏற்படவுள்ள உணவு நெருக்கடிக்கு தீர்வாக குறித்த காணிகளில் பயிர்ச் செய்கை திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் இதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, பிலியந்தலை, கெஸ்பேவ, பெப்பிலியான, நாவின்ன, போக்குந்தர மற்றும் பில்லேவ முதலான பிரதேசங்களில் இந்தக் காணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Tamil News