Home செய்திகள் இந்தியா: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவ புதிய இணையதளம் தொடக்கம்

இந்தியா: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவ புதிய இணையதளம் தொடக்கம்

புதிய இணையதளம் தொடக்கம்

புதிய இணையதளம் தொடக்கம்: இந்தியாவில் உள்ள முறை சாரா பணியாளர்களுக்கு உதவ இ-ஷ்ரம் என்ற பெயரில் புதிய இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதில் முறை சாரா பணியாளர்கள் பதிவு செய்ய வேண்டும்.

அவர்களுக்கென தனியாக 12 இலக்க எண் அடங்கிய அட்டை வழங்கப்படும் என்று மத்திய தொழிலாளர் நலம் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்தார்.

கட்டிட பணியாளர்கள், தினக்கூலி தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த பணியாளர்கள், தெருவோர பணியாளர்கள், வீட்டு வேலை புரிவோர் உள்ளிட்ட பலரும் இந்த இணையதளத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

இந்தியாவில் முறை சாரா பணியில் 38 கோடி பேர் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் உதவிகள் மற்றும் நலத் திட்ட பலன்கள் கிடைக்க இந்த இணையதளம் பாலமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version