வவுனியாவில் காணி அபகரிப்பு:இன்று களவிஜம் செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள்

தமிழரின்  காணி அபகரிப்பு

வவுனியா கல் நாட்டு குளப் பகுதிளில் தமிழரின் காணி அபகரிப்பு: வவுனியா சமளம் குளம் கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட   பாரம்பரிய கிராமங்களில் ஒன்றாகிய இத்திக்குளம் கிராமத்தின் எல்லையில் அமைந்துள்ள கல் நாட்டு குளப் பகுதிகளின் எல்லைகளை வனத் துறையினர்  கைவசப்படுத்தி வருகின்றமையை தடுத்து நிறுத்த இன்று உரிய இடத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு  நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றுள்ளனர் .

இக் காணிகள் இங்கு பாரம்பரியமாகவும் பூர்வீகமாகவும் கொண்ட தமிழ் மக்களின் காணிகளாகும். நாட்டில் மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்விக் குறியாகிக்கொண்டு வரும் வேளை, அரசு எமது மக்களுக்கு சொந்தமான நிலங்களை இவ்வாறு கையகப்படுத்துதல் மிகவும் கவலையளிக்கின்றது.

  தமிழரின்  காணி அபகரிப்பு

குறித்த இடங்களை இன்றையதினம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ சுமந்திரன்  , இரா ,சாணக்கியன்  தமிழரசுக்கட்சி செயலாளர் சத்தியலிங்கம் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டதோடு கிராம அமைப்புக்களையும் தொடர்பு கொண்டு இவ் பிரச்சனை தொடர்பான தகவல்களை பெற்றுள்ளனர் . இதற்கான நடவடிக்கைகள் துரிதமாக எடுப்பதற்கு தீர்மானித்துள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா ,சாணக்கியன் தெரிவித்துள்ளார். ilakku-Weekly-Epaper-146-September-05-2021