நில அபகரிப்பு விவகாரம்- மட்டக்களப்பில் மக்கள் போராட்டம்

நில அபகரிப்பு விவகாரம்

நில அபகரிப்பு விவகாரம்: மட்டக்களப்பு வந்தாறுமூலை பகுதியில் நீண்டகாலமாக விளையாட்டு மைதானமாக பயன்படுத்தப்பட்டு வந்த காணியை சிலர் அபகரிக்க முற்படுவதாகத் தெரிவித்து அப்பகுதியில் உள்ள மக்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வந்தாறுமூலை கிழக்கு தேவாபுரம் என்னும் பகுதியில் உள்ள மக்களே இன்று கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நில அபகரிப்பு விவகாரம்

இந்நிலையில், காவல்துறையினரே சட்டத்தினை உரிய முறையில் நடைமுறைப்படுத்து, விளையாடுவதற்கு மைதானம் தரவேண்டும்,ஏறாவூர்பற்று பிரதேசசபையே எமக்கான விளையாட்டு மைதானத்தினை பெற்றுத் தாருங்கள்,விளையாட்டு மைதானத்திற்கான நிரந்தர தீர்வினை தாருங்கள்,50வருட எங்கள் உரிமையினை மீறாதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

நில அபகரிப்பு விவகாரம்

வந்தாறுமூலை கண்ணகி வித்தியாலய மாணவர்கள் மற்றும் அப்பகுதி இளைஞர்கள் நீண்டகாலமாக குறித்த காணியை விளையாட்டு மைதானமாக பயன்படுத்திவரும் நிலையில் அதனை சிலர் தனியார் காணியென கூறி அடைக்கமுற்படுவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் உள்ள பாடசாலைகளுக்கு விளையாட்டு மைதானங்கள் இல்லாத காரணத்தினால் இந்த மைதானத்தையே பாடசாலைகளும் பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.