Tamil News
Home செய்திகள் தமிழ் அகதி குடும்பத்தை விடுவித்த அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் மேலும் அங்குள்ள அகதிகளை விடுவிக்குமா?

தமிழ் அகதி குடும்பத்தை விடுவித்த அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம் மேலும் அங்குள்ள அகதிகளை விடுவிக்குமா?

தமிழ் அகதி குடும்பத்தை விடுவித்த அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி அரசாங்கம்: ஆனால் நிச்சயத்தன்மையற்ற நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான தஞ்சக்கோரிக்கையாளர்களை என்ன செய்ய போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

முந்தைய அவுஸ்திரேலிய அரசாங்கத்தில் நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வந்த இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்தின் விசா விவகாரம், தொழிற்கட்சி அரசாங்கம் பதவியேற்ற பின்னர் முடிவுக்கு வந்திருக்கிறது. அவர்களுக்கு இணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டு முன்பு வாழ்ந்து வந்த பிலோலா பகுதிக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அதே சமயம், அவர்களுக்கு நிரந்தர விசாக்கள் வழங்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அதே சமயம், நிச்சயத்தன்மையற்ற நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான தஞ்சக் கோரிக்கையாளர்களுக்கான முக்கிய கொள்கை மாற்றங்களை அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் கொண்டு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Exit mobile version