இலங்கை தொழிலாளர்களை  குவைத் எதிர்பார்க்கின்றது- குவைத் தூதுவர் கலஃப் புதைர்

images 4 இலங்கை தொழிலாளர்களை  குவைத் எதிர்பார்க்கின்றது- குவைத் தூதுவர் கலஃப் புதைர்

இலங்கையில் புதிய வெளிவிவகார அமைச்சர்  ஜீ.எல். பீரிஸை குவைத் தூதுவர் கலஃப் புதைர்   சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத்துறை  போன்ற பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கிடையேயான கூட்டாண்மை மூலம் மேலும் விரிவுபடுத்துவது குறித்து  அமைச்சர் பீரிஸ் மற்றும் குவைத் தூதுவர் ஆகிய இருவரும் கலந்துரை யாடியுள்ளனர்.

 இந்த கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த குவைத் தூதுவர்,

“இலங்கை அரசாங்கத்துடன் இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதற்கு குவைத் அரசாங்கம் விருப்புகின்றது.

குவைத் அரசாங்கம் சுகாதாரம் மற்றும் சக்திவளத் துறைகளில் இலங்கையிலிருந்து திறமையான தொழிலாளர்களை தொழிலுக்கு அமர்த்துவதற்கு எதிர்பார்க்கின்றது” என்றார்.

இந்நிலையில், தூதுவரின் கருத்துக்களுக்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், இலங்கை அரசாங்கமும் குவைத் அரசாங்கமும் மிகவும் நட்புறவான உறவுகளை அனுபவித்து வருவதாகவும், தனது காலப் பகுதியில் வளைகுடா நாடுகளுடனான இலங்கையின் உறவுகளை வலுப்படுத்த எதிர் பார்த்துள்ளதாகவும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் ஏனைய பலதரப்பட்ட மன்றங்களில் குவைத் அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய  ஆதரவையும் குறிப்பிட்டு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

ilakku-weekly-epaper-144-august-22-2021