குறிஞ்சாக்கேணி படகு விபத்து: விசாரணையை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

குறிஞ்சாக்கேணி படகு விபத்து

குறிஞ்சாக்கேணி படகு விபத்து: கிண்ணியா, குறிஞ்சாக்கேணி படகு  விபத்தில் உயிரிழந்த நான்கு மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கம், குறித்த படகு விபத்து தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனர் அவர்கள் பக்கச்சார்பற்ற விசாரணையினை முன்னெடுக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும் அச்சங்கத்தின்  மாவட்ட பொதுச்செயலாளருமான பொன்னுத்துரை உதயரூபன் இந்த கோரிக்கையினை முன்வைத்தார்.

மேலும் இந்தச் சம்பவத்திற்கு இந்த அரசு முழுமையான பொறுப்பினை ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

IMG 20211125 WA0032 குறிஞ்சாக்கேணி படகு விபத்து: விசாரணையை முன்னெடுக்க இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை

இந்நிலையில், கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கும் முகமாக இன்று (25) கிண்ணியா  சிவில் சமூகம் இணைந்து  பாடசாலைகள், வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வெள்ளை நிற கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்க நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது.