குமுதினி படகுப் படுகொலை: 38ஆவது ஆண்டு நினைவேந்தல்

குமுதினி படுகொலை இன்று நினைவேந்தல் நாள் - pathivu.com

குமுதினி படகுப் படுகொலையின் 38ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு  யாழ்ப்பாணம் – நெடுந்தீவிலுள்ள குமுதினி நினைவு தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

குமுதினி படகில் படுகொலை செய்யப்பட்ட 36 பேரின் நினைவாக நெடுந்தீவு இறங்குதுறையிலுள்ள நினைவாலய வளாகத்திலேயே இன்றைய தினம் (15.05.2023)  குறித்த நினைவேந்தல் இடப்பெற்றுள்ளது.

1985 ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் பயணித்த குமுதினி படகை நடுக்கடலில் வழிமறித்த இலங்கை கடற்படையினர், அதில் பயணித்த குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என 36 பேரை வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இந்தப் படுகொலையில் உயிரிழந்துள்ள மக்களுக்காக இன்றைய தினம் காலை நெடுந்தீவு குமுதினி நினைவு தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.