Home செய்திகள் கோட்டாவின் சமரச முயற்சி தோல்வி – அரசில் இருந்து வெளியேறுகிறது இ.தொ.க.

கோட்டாவின் சமரச முயற்சி தோல்வி – அரசில் இருந்து வெளியேறுகிறது இ.தொ.க.

கோட்டாவின் சமரச முயற்சி தோல்வி

கோட்டாவின் சமரச முயற்சி தோல்வி

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை அரசில் தொடர்ந்து நீடிக்கச் செய்யும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து அரசில் இருந்து இ.தொ.க. வெளியேறுவவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பதவி விலகல் கடிதம் ஏற்கனவே பிரதமருக்கு அனுப்பப்பட்டு, ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜீவன் தொண்டமான் ஊடகமொன்றுக்கு கூறியுள்ளார்.

இதனிடையே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் எம். இராமேஷ்வரன் ஆகியோர் நேற்று ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசினர்.

இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி சாதகமான பதிலை வழங்கியிருந்த போதிலும் தற்போதைய சூழ்நிலையில் அவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் உள்ள நிச்சயமற்ற தன்மையால் அரச கூட்டணியில் இருந்து வெளியேற இ.தொ.க. முடிவெடுத்துள்ளதாக தெரியவருகிறது.

Exit mobile version