Tamil News
Home செய்திகள் கோட்டா கோ கமவை விட்டு வெளியேறப் போவதில்லை- எதிர்ப்பாளர்கள் சவால்

கோட்டா கோ கமவை விட்டு வெளியேறப் போவதில்லை- எதிர்ப்பாளர்கள் சவால்

கோட்டா கோ கமவை விட்டு வெளியேறப் போவதில்லை என்றும், முடிந்தால் தம்மை வெளியேற்றுமாறும் கோட்டா கோ கம எதிர்ப்பாளர்கள் சவால் விடுத்துள்ளனர்.

4 மாதங்களுக்கு முன்னர் பொலிஸாரிடமோ அல்லது அரசாங்கத்திடமோ அனுமதி பெற்று மக்கள் போராட்ட இடத்திற்கு வரவில்லை எனவும், பொலிஸார் உத்தரவிடுவதால் தாம் அந்த இடத்தை விட்டு வெளியேறபி போவதில்லை எனவும்
காலி முகத்திடலை பிரதிநிதித்துவப்படுத்தும் செயற்பாட்டாளரும் ஊடகவியலாளருமான சாந்த விஜேசூரிய தெரிவிக்கிறார்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி, பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் ராஜபக்ச எம்.பி.க்கள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்புவதில் அரகலய இதுவரை வெற்றி பெற்றுள்ளது. நாங்கள் இங்கு ஒரு முறை மாற்றத்தை செய்ய வந்துள்ளோம், அரசியல் தலைவர்களை மாற்றுவதற்காக அல்ல. கடந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பெரும் ஆணை பெற்றிருந்த நிலையில், தலைவர் என்ற முறையில் தோல்வியடைந்ததன் காரணமாகவே தனது ஆசனத்தை விட்டு வெளியேற நேரிட்டது. அப்படியானால், மக்கள் ஆணையின்றி ஒரே ஒரு போனஸ் ஆசனத்துடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக வந்த ரணில் விக்கிரமசிங்க எப்படி ஏற்றுக்கொள்வது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“காலை 5.00 மணிக்குள் இந்த இடத்தை காலி செய்யுமாறு பொலிஸார் அறிவித்தனர். ஆனால் அவர்களின் அறிவிப்புகளுக்கு செவிசாய்க்க மாட்டோம். எங்களின் வழக்கறிஞர்கள் ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நீதிமன்ற தீர்ப்பு வந்தால் பரிசீலிப்போம். கூட்டு காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் எப்போது, ​​எங்கு வெளியேறுவது என்பதை தீர்மானிப்பார்கள் அதுவரை நாங்கள் வெளியேற மாட்டோம். மேலும், முடிந்தால் எங்களை அனுப்பி வைக்க முயற்சி செய்யுமாறு சட்ட அமலாக்க அதிகாரிகளிடம் கூறுகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

Exit mobile version