Notice: Undefined variable: _SESSION in /home/gi5h742vtw17/public_html/www.ilakku.org/index.php on line 1
கிளிநொச்சி இளைஞன் காவல்துறை  சிறப்பு அதிரடிப்படையால் கைது
Home செய்திகள் கிளிநொச்சி இளைஞன் காவல்துறை சிறப்பு அதிரடிப் படையால் கைது

கிளிநொச்சி இளைஞன் காவல்துறை சிறப்பு அதிரடிப் படையால் கைது

arrested2 கிளிநொச்சி இளைஞன் காவல்துறை சிறப்பு அதிரடிப் படையால் கைதுவிடுதலைப் புலிகள் தொடர்பான புகைப் படங்களை வைத்திருந்தமை மற்றும் குற்றங்களைச் செய்ய இளைஞர்களைத் தூண்ட முயற்சித்த குற்றச் சாட்டில் இளைஞர் ஒருவர்  காவல் துறையின் சிறப்பு அதிரடிப் படையால் கைது செய்யப் பட்டுள்ளார் என காவல்துறை ஊடகப்  பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர் கிளிநொச்சியைச் சேர்ந்த 21 வயதுடைய நாகராசா பிரபா என அடையாளம் காணப் பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர், 27 1/2 அங்குல நீளமும் 11/4 அங்குல அகலமும் கொண்ட இரும்பினால் செய்யப்பட்ட வாள் ஒன்றை வைத்திருந்ததாகவும் சிம் அட்டைகளுடன் கூடிய இரு கைத் தொலைபேசிகளை வைத்திருந்ததாகவும்  அவர் மீது குற்றம் சுமத்தப் பட்டுள்ளது.

இலங்கையில் அண்மைக் காலமாக பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி தமிழ் இளைஞர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version