கேரளாவில் ஒரே நாளில் 31,445 பேருக்குக் கொரோனா தொற்று

கேரளாவில் ஒரே நாளில் 31445 கொரோனா தொற்று

கேரளாவில் ஒரே நாளில் 31445 கொரோனா தொற்று; இந்தியா – கேரளாவில் நேற்று ஒரேநாளில் மட்டும் 31 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அன்றாட  கொரோனா தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 46,164 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதே நேரம் இதுவரையில் இந்தியாவில் கொரோனா   பாதிப்பு 3,25,58,530 ஆக அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக உயிரிழப்புக்களும் அதிகரித்துள்ளன.  இது வரையில் 4,36,365 பேர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில், ஓணம் பண்டிகைக்குப் பிறகு கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதாக கேரள அதிகாரிகள் கூறுகின்றனர். பரிசோதனை செய்யும் நூறுபேரில் 19 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்படுவதால், அச்சம் ஏற்பட்டுள்ளது.

எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நேற்று மட்டும் தலா 2 ஆயிரம் பேருக்கும் அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதுமான மொத்த எண்ணிக்கை 31,445. ஒட்டமொத்தமாக கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 1.7 இலட்சமாக அதிகரித்திருக்கிறது.

கடந்த பல வாரங்களாக நாட்டின் மொத்த பாதிப்பில் பாதிக்கும் அதிகமாக கேரளாவில் கண்டறியப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ilakku-weekly-epaper-144-august-22-2021