பௌத்த மதகுருமார் பல்கலைக் கழக பதவிகளிற்கு நியமனம் – களனி பல்கலைகழக மாணவர் சங்கம் எதிர்ப்பு

களனி பல்கலைகழக மாணவர் சங்கம்
அரசாங்கம் அரசியல் நோக்கங்களை முன்னெடுப்பதற்காக பல்கலைகழகங்களை பயன்படுத்துகின்றது என களனி பல்கலைகழக மாணவர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளனர்.

கொழும்பு பல்கலைகழகத்தின் துணைவேந்தராக முருத்தெட்டுவே ஆனந்த தேரரை நியமித்துள்ளதை நாங்கள் நிராகரித்துள்ளோம் எனத் தெரிவித்துள்ள களனி பல்கலைகழக மாணவர் சங்கம், களனி பல்கலைகழகத்திற்கு வேந்தராக பௌத்த மதகுருவை நியமித்ததை நிராகரிப்பதாக கூறியுள்ளது.

தற்போதைய கோட்டாபய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்த மதகுருமார்களை பல்கலைகழக பதவிகளிற்கு நியமிப்பதாலேயே இந்த நியமனத்தை எதிர்க்கின்றோம் என்றும் குறித்த மாணவ சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் இவ்வாறான அரசியல் நியமனங்களை முற்றாக எதிர்ப்பதாகவும்  மாணவர் சங்கம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களின் கருத்துக்களை செவிமடுக்காமல் பல்கலைகழக முறையை அரசியல் நோக்கங்களிற்காக அரசாங்கம் பயன்படுத்துகின்றது என்றும்   குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ilakku Weekly Epaper 154 october 31 2021 Ad பௌத்த மதகுருமார் பல்கலைக் கழக பதவிகளிற்கு நியமனம் – களனி பல்கலைகழக மாணவர் சங்கம் எதிர்ப்பு