Home உலகச் செய்திகள் காஷ்மீர்: புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை, தொழிலாளர்களிடையே பரவும் பதற்றம் 

காஷ்மீர்: புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை, தொழிலாளர்களிடையே பரவும் பதற்றம் 

புலம்பெயர் தொழிலாளர்கள்

காஷ்மீர்: புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை, தொழிலாளர்களிடையே பரவும் பதற்றம்:  காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கியிருந்த பகுதியில் ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்  பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 2 புலம்பெயர் தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 

இந்திய படையினருக்கும் ஆயுத கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான முரண்பாடு புதிய பரிணாமத்தை அடைந்துள்ளதாக கருதப்படும் நிலையில், இதுவரை ஆயுததாரிகளால் 5 புலம்பெயர் தொழிலாளர்கள் உள்பட 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவங்களால் பெரும் அச்சமடைந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் காஷ்மீரிலிருந்து வெளியேறி வருவதாகக் கூறப்படுகிறது.

அத்துடன், காஷ்மீரில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களை அருகாமையில் இருக்கும் காவல் நிலையம், துணை ராணுவப் படை முகாம் அல்லது இந்திய இராணுவ முகாமிற்கு அருகே அழைத்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version