‘கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணியத் தடை ’ : கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு

ஹிஜாப் அணியத் தடை

இஸ்லாம் மதத்தில் ஹிஜாப் அணிவது அத்தியாவசியப் பழக்கமில்லை. அதனால், கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும்” என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கர்நாடகாவில் அரசுப்பள்ளி ஒன்றில் கடந்தமாதம் ஹிஜாப் அணிந்து வகுப்பில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதால், பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. ஹிஜாப்புக்கு ஆதரவாகவும், எதிராகவும் போராட்டங்கள் வலுவடைந்த நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அதில், விசாரணை முடியும் வரை ஹிஜாப் அல்லது காவித் துண்டு உள்ளிட்ட மத அடையாளங்களோடு மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லக்கூடாது என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது.

தற்போது விசாரணை நிறைவடைந்த நிலையில், இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவ்வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தத் தீர்ப்பில், “கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணியத் தடை விதித்தது செல்லும். ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசியமானது அல்ல” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக முன்னெச்சரிக்கையாக வரும் 21-ஆம் தேதி வரை பெங்களூருவில் பொது இடங்களில் கூட்டம் கூடவும், கொண்டாட்டங்கள், போராட்டங்களில் ஈடுபடவும் காவல்துறை தடை விதித்துள்ளது. தக்‌ஷின் கன்னடா, ஷிவ்மோகா, கலபுர்கி உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tamil News