Home செய்திகள் மட்டு: ஊடகவியலாளர் ஒருவர் சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் விசாரணை

மட்டு: ஊடகவியலாளர் ஒருவர் சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் விசாரணை

IMG 1401 மட்டு: ஊடகவியலாளர் ஒருவர் சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் விசாரணை

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பொருளாளரும் ஊடகவியலாளருமான புண்ணியமூர்த்தி சசிகரன், இன்று மட்டக்களப்பு சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் காரியலய சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இன்று காலை சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் காரியாலயத்தில் உள்ள சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்டு இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இன்று காலை 9.30மணி தொடக்கம் 11.30மணி வரையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

கடந்த ஆண்டு கடலில் கொல்லப்பட்ட இந்திய மீனவர்களுக்கு அஞ்சலி நிகழ்வு நடாத்தப்பட்டமை குறித்து தம்மிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளே இவ்வாறான விசாரணைகள் என்றும் இதன்போது கருத்து தெரிவித்த சசிகரன், ஊடகவியலாளர்கள் சுதந்திரமான தமது கடமையினை செய்யும் நிலைமையினை ஏற்படுத்த ஜனாதிபதி முன்வர வேண்டும் எனவும்   வேண்டுகோள்விடுத்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப் படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version