தமிழ்க் கட்சிகளின் கூட்டுக் கடிதம் இந்திய உயர் ஸ்தானிகரிடம் கையளிப்பு

கூட்டுக் கடிதம் இந்திய உயர் ஸ்தானிகரிடம் கையளிப்புதமிழ்க் கட்சிகளின் கூட்டுக் கடிதம் இந்திய உயர் ஸ்தானிகரிடம் கையளிப்பு: தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் ஒன்றிணைந்து தயாரித்த கூட்டு ஆவணம் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவிடம் நேற்று மாலை கையளிக்கப்பட்டது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கையளிப்பதற்காகத் தமிழ் மக்களின் பொது நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் இந்தியத் தூதுவரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் இந்த ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டது.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, சி.வி.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன் , தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.. சுமந்திரன், இ குருசுவாமி சுரேந்திரன் (ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இலங்கையின் சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பிலும் இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்டது.

Tamil News