Notice: Undefined variable: _SESSION in /home/gi5h742vtw17/public_html/www.ilakku.org/index.php on line 1
ஜப்பானிய பண்ணைகளில் வேலை வாய்ப்பு! இலங்கையில் இருந்து தொழிலாளர்களை சேர்த்துக்கொள்ள நடவடிக்கை | October 3, 2023
Home செய்திகள் ஜப்பானிய பண்ணைகளில் வேலை வாய்ப்பு! இலங்கையில் இருந்து தொழிலாளர்களை சேர்த்துக்கொள்ள நடவடிக்கை

ஜப்பானிய பண்ணைகளில் வேலை வாய்ப்பு! இலங்கையில் இருந்து தொழிலாளர்களை சேர்த்துக்கொள்ள நடவடிக்கை

ஜப்பானிய பண்ணைகளில் இலங்கை மற்றும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பிற நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் பணிகளுக்கு சேர்த்துக்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜப்பான் முழுவதிலும் உள்ள பண்ணைகள் அதிகளவில் தென்கிழக்கு ஆசியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள தற்காலிக தொழிலாளர்களை சேர்த்துக்கொள்ள தயாராகவிருக்கின்றன.

உள்ளூரில் பணியாளர்களின் வெற்றிடங்களே இதற்கான காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் 12 துறைகளுக்கு வெளிநாட்டு ஊழியர்களை ஈர்ப்பதற்காக ஜப்பான் ஏப்ரல் 2019 இல் தனது குறிப்பிட்ட திறமையான பணியாளர் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.

எனினும் தொழிலாளர்கள் ஜப்பானிய மொழி சோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த திட்டத்தின் கீழ் ஒரு வகை பணியாளர் ஐந்து ஆண்டுகள் வரை தங்கலாம் ஆனால் அவர்களது குடும்பத்தை நாட்டிற்கு அழைத்து வரமுடியாது.

இரண்டாவது பிரிவினர் நீண்ட காலம் ஜப்பானில் தங்கி, குடும்ப உறுப்பினர்களுடன் சேர அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதேவேளை குடிவரவு சேவைகள் தரவுகளின்படி, ‘குறிப்பிட்ட திறமையான தொழிலாளி’ அந்தஸ்துள்ள 10வீதத்துக்கும் குறைவானவர்கள் தற்போது பண்ணைகளில் பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

Leave a Reply

Exit mobile version