Tamil News
Home செய்திகள் குருநகரின் அவல நிலைக்கு யாழ் மாநகர சபையும் அரசியல் வாதிகளுமே காரணம்-கணேஸ்

குருநகரின் அவல நிலைக்கு யாழ் மாநகர சபையும் அரசியல் வாதிகளுமே காரணம்-கணேஸ்

இன்று மக்கள் சந்திப்பு ஒன்றுக்கு யாழ். குருநகருக்கு சென்ற வேளையில் அங்குள்ள மக்களை சந்தித்த  ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளரான  கணேஸ் வேலாயுதம் ,அங்குள்ள மக்களில் ஒருசாரார் தங்கள் துயரத்தை அவரோடு பகிர்ந்து கொண்டனர் என தெரிவித்ததோடு , அவர்களோடு நேரடியாக தான் பார்வையிட்ட அந்த அவல நிலை தொடர்பாக வெகு நேரம் கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார்.

யாழ். குருநகர் என்பது யாழ். நகரிலிருந்து ஒரு கிலோ மீட்டர் அளவிளான தூரத்தில் உள்ளது. இதற்கு அடுத்த கிராமம்தான் யாழ். மேயராக பதவிவகித்த  இம்மானுவேல் ஆர்னோல்ட் அவர்களது வசிப்பிடமாகும். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அந்த பகுதியில் வாழும் குறிப்பிட்ட மக்கள் இ தமக்கு சொந்தமாக காணிகளோ அல்லது வீடுகளோ இல்லாமல் கால்வாய்களுக்கு மேல் வீடுகளை கட்டிக் கொண்டு வாழ்கிறார்கள்.

மிக குறுகிய பகுதிக்குள்ளேயே பல குடும்பங்கள் லயன் போல வீடுகளை அமைத்துக் கொண்டு வாழ்வதை பார்க்க பரிதாபமாக உள்ளது. இப்போது ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக இவர்களது வீடுகளை இடிக்கப் போவதாக மாநாகரசபை அறிவித்துள்ளதாக அந்த மக்கள் கவலையோடு தெரிவித்தார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளரான கணேஸ்வரன் வேலாயுதம் தெரிவித்தார்.

கம்பெரலிய மற்றும் வீட்டு திட்டங்கள் போன்றவை வடக்குக்கு வந்த போதும் அங்கு காலா காலமாக அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் இ தங்களுக்கு வீடுகளை கட்டித் தர முயலவில்லை. 200 சதுர அடி பரப்புக்குள்  6 குடும்பங்கள் வீதம்  ஒரே வீட்டுக்குள் 6 – 7 குடும்பங்கள் வாழ்வதாகவும்  இ தேர்தல் நேரத்தில் மட்டும் வந்து வாக்குறுதிகளை தந்து விட்டு  வாக்குகளை கேட்கும் தமிழ் அரசியல்வாதிகள் இ அதன்பின்  அங்கு வருவதே இல்லை என ஒரு இளைஞர் நேரடியாக தமிழ் அரசியல் தலைவர்களை குற்றம் சாட்டினார் என்றார் அவர்.

குருநகரின் சிறியதொரு பரப்பில் 7000 குடும்பங்கள் வாழுகிறார்கள் எனத் தெரிவித்த  அவர்  இ அவர்கள் வாழும் வீடுகள் உள்ள இடத்தில் உள்ள கால்வாய்களை சுத்தம் செய்ய மாநகரசபை வருவதே இல்லை என்றும் இ அங்கு மிக மோசமான துர்நாற்றம் வீசுவதாகவும் தெரிவித்தார்.

இதுவரை அரசியல் செய்யும் அரசியல் கட்சிகள் இ  மாநாகர சபை மற்றும் மாகாண சபை ஒரு உதவியையும் செய்யாமல் இ அந்த மக்களை இ இப்படியான அவல வாழ்வுக்கு தள்ளியுள்ளது எனத் தெரிவித்த கணேஸ் வேலாயுதம் இ தான் தேர்தலில் வென்று பதவிக்கு வந்தால் ஏதோ ஒரு விதத்தில் நிச்சயம் இதுபோன்ற விடயங்களுக்கு விடிவை ஏற்படுத்திக் கொடுத்து அந்த மக்கள் வாழ்வை மலரச் செய்வேன் என்றார்.இப்படியான இடங்களின் கழிவுகளை மாநகரசபை தினமும் எடுக்க வேண்டியது அவர்களுடைய பணியாகும் .

ஆனால் வெகு காலமாக அப்படியான பணிகள் அங்கு நடைபெறுவதில்லை என அந்த மக்கள் கூறுகிறார்கள். மாநாகரசபை அதை உடனடியாக செய்தால் அங்கிருந்து எழும் துர்நாற்றத்தை  உடனடியாக இல்லாமல் செய்ய முடியும். இது ஒரு சுகாதார கேடாக இருக்கிறது.   உடனடியாக இந்த கழிவுகளை மாநகரசபை  அகற்ற முன்வர வேண்டும் என அவர் மாநகரசபையிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version