Home செய்திகள் நேற்று இன்று நாளை: யாழ். மாவட்டம் வடமராட்சி கிழக்கு நிலைமை | தாஸ்

நேற்று இன்று நாளை: யாழ். மாவட்டம் வடமராட்சி கிழக்கு நிலைமை | தாஸ்

வடமராட்சி கிழக்கு நிலைமை

தாஸ்

வடமராட்சி கிழக்கு நிலைமை: யாழ் மாவட்டத்தில் மிகவும் பின்தங்கியதும், வளம் நிறைந்த பிரதேசமாகவும் இருந்த வடமராட்சி கிழக்கு பிரதேசம், 18 கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்ட ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழும் பிரதேசமாகும்.

2004-இல் ஏற்பட்ட சுனாமி பாதிப்புகளாலும், யுத்தத்தாலும் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வடமராட்சி கிழக்கும் ஒன்றாகும்.

பருத்தித்துறையில் இருந்து தாளையடி வரை ஒரே Road ஐ (தெரு) கொண்ட பிரதேசம் ஆகும்.  மிகவும் பெரிய அளவு கடல் வளத்தையும், விவசாய நிலத்தையும் கொண்ட வடமராட்சி கிழக்கு, மருத நிலமும், நெய்தல் நிலமும் கொண்ட  பிரதேசமாகும்.

நேற்று அங்கு வாழ்ந்த மக்கள் கடல்வளத்திலும், விவசாயத்திலும் தன்னிறைவான நிலைமையில் வாழ்ந்தார்கள்.  இன்று சிறு காடுகள், நாவல் காடுகள் முற்றாக அழிக்கப்பட்டு நிலப்பறிப்பு செய்யப்பட்டு வருகின்றது.

யாழ். குடா நாட்டின் வடபகுதியில் உள்ள வடமராட்சி கிழக்குப் பிரதேசத்தில் வாழும் மக்களில் 80% சதவீதமான மக்கள் கடல் தொழில்களையும், விவசாயத்தையும் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். இங்கு வாழும் கடல் சார் மக்களுக்கும், விவசாய மக்களுக்கும் இடையில் பண்டமாற்று முறை மிகவும் சீராகக் காணப்பட்டது.

இங்கு உள்ள மண்ணில் 10 அடி ஆழத்தில் நன்னீர் காணப்படும். எல்லா காலங்களிலும் நெல்,  சிறுதானியப் பயிர்கள்  மற்றும் மரக்கறிப் பயிர் செய்கை மேற்கொள்ளப்படும்.

கடல் வளத்தைப் பொறுத்தவரையில், முஸ்லிம் சிங்கள மக்கள் கடல் அட்டை மீன்பிடி தொழிலை போட்டி போட்டு செய்து வருகின்றார்கள். முல்லைத்தீவு, நாயாறு, தாளையடி, கட்டைக்காடு  போன்ற இடங்களில்  வாடிகள், படகுகள், வலைகள் எரியூட்டப்பட்டு, தமிழ் மீனவர்கள் அந்தப் பகுதியிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு சிங்கள மீனவர்கள் தொழில் செய்து வருகின்றனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட அனர்த்தங்களுக்கான அபிவிருத்தித் திட்டம் தொடர்பான ஒரு ஆய்வாக மாநாடுகளில், யாழ் மாவட்டத்திலிருந்து பருத்தித்துறை தொடங்கி மருதங்கேணி, சுண்டிக்குளம் ஊடாக முல்லைத்தீவு, திருகோணமலை மட்டக்களப்பு, கல்முனை, பொத்துவில் ஊடாக வீதிகள் புனரமைப்பு செய்யப்பட்டு, வடக்கு கிழக்கிற்கான இணைப்புப் பாதை உருவாக்க திட்டமிடப்பட்டது. இத்திட்டம் இன்று பல வகையில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஊடாக தடை செய்யப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக எந்த ஒரு அரசியல்வாதிகளும் கவலை இல்லாமல் இருக்கின்றனர்.

யுத்தத்தால் மிகவும் மோசமாகப் பாதிப்படைந்த மக்கள் இந்த பிரதேசங்களில் அதிக அளவில் காணப்படுகின்றனர். 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கணவனை இழந்த பெண்கள், தந்தையை இழந்த குழந்தைகள் இந்தப் பகுதியில் உள்ள போதும், பத்து வருடங்களாக எந்த ஒரு விதமான வாழ்வாதாரத் திட்டங்களும் இவர்களுக்கென மேற்கொள்ளப்படாமல் காண்பாரற்று இருக்கின்றனர்.

பறவைகளின் சொர்க்க பூமியாகவும், வெண் மணல் பூமியாகவும் உள்ள வடமராட்சிப் பிரதேசம் 5 முதல் 10 அடி உயரத்தில் இடத்தில் பல ஏக்கர்களில் நாவல் காடுகளை கொண்ட கொண்ட ஒரு பிரதேசமாகும்.

இன்று இவை முழுமையாக அழிக்கப்பட்டு, நிலம் அபகரிக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றது. ஆயிரம் ஏக்கரில் நடவு செய்யப்பட்ட சவுக்கு மரம் இன்று அழிவடைந்து காணப்படுகின்றது. இது சுனாமி ஏற்பட்ட போது கடல் அரிப்பை தடுக்கக் கூடியதாக இருந்தது. இந்தப் பிரதேசம் இந்த இன்று கைவிடப்பட்டு மோசமான நிலையில் காணப்படுகின்றது.

பறவைகள் சரணாலயம் என்ற பெயரில் நாற்பத்தி எட்டு ஆயிரம் பரப்பு நிலம் சுண்டிகுளத்தில்  அபகரிக்கப்பட்டு, சிங்கள மக்கள் கடல் தொழில் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுவதற்காக அந்த பகுதியில் வாழ்ந்த தாயக மக்கள் இதற்காக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

சுய உற்பத்தி செய்வதற்கு பொருத்தமான வளம் மணல் காட்டில் இருந்து தாளையடி வரைக்கும் காணப்படுகின்றது. மக்களுக்கான விவசாய நடவடிக்கைகள், மீன்பிடி கருவாடு உற்பத்தி திட்டங்கள், மீன்கள் தகரத்தில் அடைக்கும் தொழில்கள் மேற்கொள்ளவும், ஐஸ் உற்பத்தி ஆலைகள் அமைக்கவும் இங்கு போதுமான வளங்கள் இருக்கின்றன. எனவே இதனை சரியான முறையில் உபயோகப்படுத்த சர்வதேச நிறுவனங்கள் துறை சார் நிபுணர்கள் முன்வர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகவும் தேவையாகவும் உள்ளது.

முல்லைத்தீவு ஊடாக பருத்தித்துறை முதல் திருகோணமலை வரை பாதைகள் போடப்பட வேண்டும் என்பதே இன்றைய தேவையாகும். அதுவே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.  இதற்கு பொருத்தமானவர்கள் முன்வந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அம்மக்களின் ஆவலாக உள்ளது.

Exit mobile version