Tamil News
Home செய்திகள் டெங்கு அதிதீவிரமடைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம் அறிவிப்பு

டெங்கு அதிதீவிரமடைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம் அறிவிப்பு

நாட்டில் டெங்கு தொற்று அதிதீவிர நோய் நிலை மாவட்டமாக யாழ்ப்பாணம் தரப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தகவல்களின் அடிப் படையில், கடந்த 8ஆம் திகதி வரை எட்டு நாள்களில் யாழ்ப்பாணத்தில் 448 பேர் டெங்கு தொற்றுடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். நாட்டில் இந்த வருடம் மாவட்ட அடிப்படையில் அதிக டெங்கு தொற்றாளர்கள் பதிவான மாவட்டமாக யாழ்ப்பாணமே காணப்படுகின்றது.

இதேவேளை, கடந்த வருடம் அதிதீவிர தொற்று நிலையைக் கொண்டிருந்த கொழும்பில் இவ்வருடம் 284 டெங்குத் தொற்றாளர்களே இனங்காணப்பட்டனர். யாழ்ப்பாணத்தை பொறுத்தவரையில் யாழ். போதனா மருத்துவமனையில்
258 பேரும், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் 93 பேரும். ஊர்காவற்றுறை ஆதார மருத்துவமனையில் 35 பேரும், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் 33 பேரும், தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் 29 பேருமாக 448 டெங்கு நோயாளர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Exit mobile version