Tamil News
Home செய்திகள் யாழ். நூலகம் தீக்கிரையாகி 42 ஆண்டுகள்– இன்று நினைவேந்தல்

யாழ். நூலகம் தீக்கிரையாகி 42 ஆண்டுகள்– இன்று நினைவேந்தல்

யாழ்ப்பாணம் பொதுஜன நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டமையின் 42 ஆவது ஆண்டு நினைவேந்தல், யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (01) இடம்பெற்றது.

நினைவேந்தலின் போது யாழ்ப்பாண பொதுஜன நூலகத்தை உருவாக்குவதற்கு காரண கர்த்தாவாக விளங்கிய செல்லப்பாவுக்கும், நூலகத்தை எரியூட்டப்பட்டதை அறிந்து உயிரிழந்த தாவீது அடிகளாருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நூலகம் எரிக்கப்பட்ட காலத்தில், அங்கு சுமார் 97,000 அரிய நூல்கள் இருந்ததுடன், பழைமையான ஏடுகள் என்பவை பெரும்பான்மையின வன்முறை கும்பலால் தீயிட்டு கொளுத்தப்பட்டது.

குறித்த நூலகமே தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version