Home செய்திகள் போர்க்குற்றம் சாட்டப்பட்ட படையினர்,மோசமான ஊழல்வாதிகள்,உறவினரைக் கொண்ட கோத்தபாய அரசு

போர்க்குற்றம் சாட்டப்பட்ட படையினர்,மோசமான ஊழல்வாதிகள்,உறவினரைக் கொண்ட கோத்தபாய அரசு

கோத்தபாய தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தில் முக்கிய பொறுப்புகளை வகிப்போரின் பின்னணிகள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கியதாக ”உண்மைக்கும் நீதிக்குமான பன்னாட்டுத் திட்டம்” (ITJP) இன்று (07 யூலை 2020)அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில், அரசாங்க கொள்கையினைக் கட்டுப்படுத்தும் இராணுவ மற்றும் அரசாங்க அதிகாரிகளைக் கொண்ட ஒரு அமைப்பு வெளிச்சத்திற்கு வருகின்றது எனவும் கூறப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையின் முழுவருவம் பின்வருமாறு;

                       இலங்கையில் ஒரு இணையான அரசா?

ஜனநாயக ரீதியாக தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்றத்தின் வழமையான கொள்கைகளையும் கடந்து அதிகாரம் மிக்க இராணுவ மயப்படுத்தப்பட்ட செயலணிகள் ஊடாக தன்னாட்சி அதிகாரம் உடையவர் போல் இலங்கையின் ஜனாதிபதி இலங்கையை எவ்வாறு ஆட்சி செய்துகொண்டுள்ளார் என்பதனை ஒரு புதிய விளக்கப்படம் ஒன்று வெளிப்படுத்துகின்றது.

இந்த அமைப்புக்கள் சரியான முறையில் மக்காளால் தெரிவு செய்யப்படாதவை அத்துடன் சிவில் சேவையின் முழு ஒத்துழைப்பு தேவைப்படும் ஜனாதிபதியின் நேரடியாக பொறுப்பில் உள்ளதுடன் அவை பாராளுமன்றத்தின் வழமையான ஆய்வுக்கும் மேற்பார்வைக்கும் உட்படுவதில்லை.

செயலாளர்கள் மாத்திரமின்றி அமைச்சர்கள் ( தற்போது 16 ) மற்றும் அமைச்சரவைக் குழுக்கள் இந்த தெரிவு செய்யப்படாத அமைப்புக்களுக்கு கீழ்ப்படிந்து பணியாற்ற வேண்டியிருக்கும் அத்துடன் அவை அவ்வாறு செய்யாவிட்டால் தமது தொழில்களுக்கு குறிப்பிட்டுச் சொல்லமுடியாத பின்விளைவுகளை ஏற்படுத்தும் விதமாக ஜனாதிபதிக்கு அவை பற்றி அறிவிக்கப்படும்.

அரசியல் யாப்பில் திருத்தம் செய்யக்கூடியதாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ஜனாதிபதி பெற்றுக்கொள்வார் என நம்பப்படும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல்கள் காரணமாக இது மேலும் கவலையடையச் செய்கின்றது.

இந்த செயலணிகள் ஒரு சமாந்தர அரசினை உருவாக்கும் ஆபத்தைக் கொண்டுள்ளதுடன் பெரும்பாலும் ஜனாதிபதி,அவருடைய குடும்பம் மற்றும் முன்னாள் இராணுவச் சகபாடிகளுக்கு ஆதரவு வலையமைப்புக்கள் மற்றும் பொதுச் சொத்துக்களைப் பாவிப்பதற்கான இணையற்ற அதிகாரத்தை வழங்குகின்றது” என ITJP இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்தார்.

அதிகாரத்தை மேற்கொள்வதற்கான இந்தப் புதிய திட்டமுறையானது அடுத்துவரும் தேர்தல்களுக்கு பின்னரும் தப்பிப்பிழைத்து இருக்கும் என்பது மேலும் கவலைக்குரியது,இந்த தேர்தல்கள் எவ்வாறாயினும் பாராளுமன்றத்திற்கு இணங்கிப் போவதாகவும் மற்றும் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவானதாகவும் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.”

ஜனாதிபதி அவர்கள் அரசாங்க நிதியை ஒதுக்கி மூன்று மாதங்களுக்கும் மேலாக பாராளுமன்ற அமர்வு இல்லாமல் வழங்கப்பட்ட ஒரு வரவுசெலவுத்திட்ட கணக்கில் நேரடியாகஇயங்குவதாக கூறப்படுகின்றது.

இலங்கை அரசால் நடாத்தப்படும் செய்தித்தாள் மற்றும் ஏனைய ஊடகங்களின் படி எந்த வித வெளிப்படையான மேற்பார்வையுமின்றி கிட்டத்தட்ட காலாண்டு நிதியின் அரைவாசி அவரது சகோதரனான பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த அமைச்சு ஊடாகவும் ,10 சதவீதமானவை மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவின் தலைமையின் கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சிற்கும் சென்றிருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

“அண்மைய மாற்றங்கள் அதிகாரத்தை ஒன்றுகுவிப்பதுடன் உத்தியோகபூர்வமான நியமனங்கள் மூலம் ஏற்கனவே அதிகளவான அதிகாரத்தை அனுபவித்துவரும் ஜனாதிபதியின் முக்கிய இராணுவ நண்பர்களுக்கும் மேலும் தடையற்ற அதிகாரத்தை வழங்குகின்றது” என ITJP இன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்தார்.

அரசாங்க கொள்கையினைக் கட்டுப்படுத்தும் இராணுவ மற்றும் அரசாங்க அதிகாரிகளைக் கொண்ட ஒரு அமைப்பு வெளிச்சத்திற்கு வருகின்றது என அவர் மேலும் தெரிவித்தார். 1989 இல் மாத்தளையில் ஜேவிபி இனை நசுக்கிய காலப்பகுதியில் எல்லா அதிகாரங்களையும் கொண்ட மாவட்ட இராணுவ இணைப்பாளராக இருந்த ஜனாதிபதியின் முன்னைய பணியை நினைவு படுத்துவதாக இந்த ஆட்சிக்கட்டமைப்பு உள்ளது. முழு நாட்டின் மீதும் தங்குதடையின்றி கட்டுப்பாட்டைக் கொண்ட இந்த மாதிரியை அவர் உருவாக்கிக் கொண்டிருப்பது போல் தெரிகின்றது”.

செயலணிகளின் உருவாக்கமானது சட்ட ரீதியாக கேள்வி எழுப்பக்கூடியதாகவும் நிர்வாக ரீதியாக இருண்டதாகவும் உள்ளது என இலங்கையிலுள்ள வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். இந்த செயலணிகளுக்கு கால எல்லை என்பது இல்லை, அதேவேளையில் செயலணிக்கான வரைவானது ஒழுங்கற்றதாகவும் இலக்கணமற்றதாகவும் காணப்படுகின்றது.

செயலணி என்ற அதன் பெயரே இராணுவமயமாக்கலை நினைவூட்டுவதாக உள்ளதுடன் அதில் உள்ளடக்கப்பட்ட அமைப்புக்களில் பெரும்பான்மையாக இராணுவம் ,ஆண்,சிங்களம் மற்றும் தேர்தல்கள் மூலம் செய்யப் படாதவர்களையும் உள்ளடக்குவதுடன் இதில் உள்ளடக்கப்பட்டவர்களுக்காகவே இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது,அத்துடன் செயலணிகளின் கட்டளைகளை நிறைவேற்றுவது மட்டுமே அவர்களின் பணியாகும்.

சிவில் சேவையாளர்களாகவுள்ள உறுப்பினர்கள்

இந்த செயலணிகளிலுள்ள அதிகாரிகளில் சிலர் முன்னைய அரசாங்கத்தின் காலப்பகுதியில் ஊழல் குற்றச்சாட்டுக்காக விசாரணைக்குட்படுத்தப்பட்டவர்கள் என்பதை குறிப்பிடுதல் பொருத்தமானதாக இருக்கும்.

பாதுகாப்பான ஒரு நாட்டையும், கட்டுப்பாடு , நல்லொழுக்கம் மற்றும் சட்டபூர்வமான சமூகத்தையும் கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணியின் செயலாளர் DMS திசநாயக்கா பாதுகாப்பமைச்சின் மூத்த உதவிச் செயலாளர் ஆவார். சட்டமா அதிபர் அலுவலகம் DMS திசாநாயக்காவை கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது அவரால் உருவாக்கப்பட்ட அவன்ட் காட் மிதக்கும் ஆயுதக்களஞ்சியம் தொடர்பான வழக்குகளில் ஒன்றில் சந்தேக நபராக இருப்பதாக கருதியது.

பாதுகாப்பமைச்சில் கோத்தபாய ராஜபக்சவிற்கு கீழ் பணியாற்றிக் கொண்டிருந்த DMS திசாநாயக்காவை கைதுசெய்யுமாறு 2019 இல் சட்மா அதிபர் கட்டளையிட்டார், ஆனால் அதைத் தொடர்ந்து இந்தக் குற்றச்சாட்டுக்கள் பின்வாங்கப்பட்டன .

ஜனாதிபதி செயலணியானது பொருளாதார மறுமலர்ச்சிக்கும் வறுமை ஒழிப்பிற்கும் பொறுப்பானதாகும்:

இந்த முக்கிய பொருளாதார செயலணியிலுள்ள செயலாளர்களில் ஒருவரான DS ஜெயவீர அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் இருந்து கலாநிதிப்பட்டம் பெற்றதாக கூறி ஒரு போலிச் சான்றிதழை சமர்ப்பித்தமைக்காக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவினால் 2012 இல் விசாரிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையின் தலைமைப் பணிப்பாளராக இருந்த போது நிதிமுறைகேடு ( 5.7 மில்லியன் ரூபா) பற்றிய குற்றச்சாட்டுக் குறித்து 2016 இல் அவர் மீண்டும் விசாரணை செய்யப்பட்டார்.

இன்னுமொரு உறுப்பினரான திறைசேரியின் ஓய்வுபெற்ற பிரதிச் செயலாளரான S.B.திவாரத்ன யுத்தம் இடம்பெற்ற இடம்பெற்ற இறுதி நாட்களில் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளராக இருந்த போது வன்னிக்கு போதியளவு உணவுப் பொருட்களை அனுப்பாமை தொடர்பில் விசாரணை செய்யப்பட்டிருக்க வேண்டும். இவ்வாறு உணவு அனுப்பபடாமை குறித்து ஐக்கிய நாடுகளின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டதுடன் வேண்டுமென்று பட்டினி போடுதல் இடம்பெற்றதாகவும் குற்றஞ்சாட்டியது.

2009 இல் படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளரான லசந்த விக்கிரமதுங்காவினால் வெளிக்கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய மிக் யுத்த விமானக் கொள்வனவுக்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட ஏலவிற்பனை சபையில் ஒரு உறுப்பினராக இருந்தார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ( தற்போதைய ஜனாதிபதி) 2009 இல் தன்னுடைய தகப்பனாரைக் கொலை செய்வதற்கு கட்டளை வழங்கியமைக்கு பொறுப்பாக இருந்தார் என குற்றஞ்சாட்டி சித்திரவதையால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் அகிம்சா விக்கிரமதுங்க 2019 இல் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக கலிபோனியாவில் சேததிற்கான இழப்பீட்டு வழக்கினை பதிவு செய்தார்.

முறைகேடுகளைப் பற்றி அறிந்திருந்தமை அல்லது சம்பந்தப்பட்டிருந்தமை குறித்து இலங்கை ஊடகங்களில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட இரண்டு மேலதிக உறுப்பினர்கள் இருக்கின்றார்கள், அந்தக் குற்றச்சாட்டுக்களை அவர்கள் மறுக்கின்றனர்.

– ஒட்டு மொத்த சமூக வாழ்க்கையின் வாழ்வாதாரத்திற்கான தொடர்ச்சியான சேவைகளை வழங்குவதை வழிநடத்தும், ஒருங்கிணைக்கும் மற்றும் கண்காணிக்கும் ஜனாதிபதி செயலணி பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளது, இது தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது:

பிரதமர் மகிந்த ராஜபக்சவின் செயலாளரான காமினி செடர சனரத் 2016 இல் பணமோசடி தடுப்புச்சட்டம் மற்றும் பொதுச் சொத்துச் சட்ட தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டதாக இலங்கை ஊடகங்கள் தெரிவித்தன, ஆனால் பின்னர் ஆகஸ்ட் 2019 இல் அரச நிதி முறைகேடு குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இன்னுமொரு உறுப்பினரான டாக்டர் பிறியத் பண்டு விக்கிரம, உள்ளூர் அபிவிருத்தி , நீர் விநியோகம் மற்றும் வீட்டு வசதிகளுக்கான செயலாளர் ,இவரது அமைச்சுப் பதவி பிரதமர் மகிந்த ராஜபக்சவின் கீழ் வருகின்றது. துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவராகப் பணியாற்றிய வேளையில் விக்கிரம 20 ஒக்டோபர் 2014 மற்றும் 7 ஜனவரி 2015 இலும் தேர்தல் வேலைகளுக்காக 319 பணியாளர்களை சட்டத்திற்குப் புறம்பானமுறையில் வேலைவாய்ப்பு வழங்கியிருந்தார் என இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால்க் குற்றஞ்சாட்டப்பட்ட பின்னர் நவம்பர் 2019 இல் ஒரு ஊழல் வழக்கினை எதிர்கொண்டார். இந்த வழக்கினது இறுதி முடிவு இன்னமும் முடிவில்லாமல் உள்ளது.

முதல் ராஜபக்ச அரசாங்கத்தில் (2005 – 15) இருந்த அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்பட்ட ஊழல் பற்றி முன்னைய அரசாங்கத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது, இந்த விசாரணைகளில் சிலவற்றை அரசியல் ரீதியான பலியாக்கல் ; பற்றி ஆராயும் புதிய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவினால் விசாரணை செய்யப்பட்டு வருகின்றது என்பதை குறிப்பிடுதல் பொருத்தமானதாக இருக்கும். இதனைவிட, நவம்பர் 2019 ஜனாதிபதி தேர்தல்களுக்கு சற்றுமுன்னர் பல சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட்டன.

இராணுவமாக உள்ள உறுப்பினர்கள்

ஜனாதிபதி ராஜபக்சவின் உள்வட்டத்திலுள்ள இராணுவ உறுப்பினர்கள் அரசாங்கத்தில் அதிகாரம் மிக்க பதவிகளை வகிக்கின்ற அதேவேளையில் இந்தச் செயலணிகளிலும் இரண்டு அல்லது மூன்று என்று கூட பல பதவிகளை வகிப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

– ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலான கமால் குணரட்ண இரண்டு புதிய ஜனாதிபதி செயலணியின் தலைவராக உள்ளார். அவர் பாதுகாப்புச் செயலாளராகவும் உள்ளார். அத்துடன் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பதவிக்கு வந்த போது 31 முக்கிய அரச நிறுவனங்கள் அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் வழங்கப்பட்டது.

– ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுமத பெரேரா தற்போதைய செயலணிகளில் ; இரண்டில் உறுப்பினராக உள்ளார். அவர் 1989 இல் கோத்தபாய ராஜபக்சவின் கீழ் கஜபாகு படைப்பிரிவில் கடமையாற்றினார் அப்போது ஜனாதிபதி அவர்கள் மாத்தளை மாவட்டத்திற்கான  மாவட்ட இராணுவ இணைப்பாளராக இருந்தவேளையில் அந்த மாவட்டத்தில் 700 சிங்களவர்கள் அரச பாதுகாப்பில் இருந்து காணாமற்போனதாக அறிவிக்கப்பட்டது.

– கோத்தபாய ராஜபக்சவிற்கு கீழ் மாத்தளையில் சேவையாற்றிய லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா செயலணிகளில் இரண்டில் உள்ளார், அத்துடன் நாட்டில் இரண்டு மிக மூத்த இராணுவப் பதவிகளையும் வகிக்கின்றார். கோத்தபாய அதிகாரமிக்க பாதுகாப்புச் செயலாளராக இருந்த போது 58 ஆவது படையணியின் தளபதியாக அவர் 2009 போரில் ஒரு முக்கிய அதிகாரியாக இருந்தார். அமெரிக்க அரசாங்கத்தால் அவர் பாரிய மனித உரிமைகள் மீறல்கள் குற்றச்சாட்டுக்களுக்காக கண்டிக்கப்பட்டார்.

இராணுவத்தின் கட்டுப்பாடு, பாதுகாப்பமைச்சு , புலனாய்வு , முக்கிய பொலிஸ் திணைக்களங்கள் ,சுங்கம் , துறைமுகங்கள்; சிறை தொழிற்பயிற்சி என்பவற்றுடன் அரசாங்கத்தின் முக்கிய பதவிகளிலுள்ள சிவில் சேவையாளர்களும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் முக்கிய நம்பிக்கைக்குரிய அதிகாரிகளாக உள்ளார்கள்.

பாராளுமன்றத்திற்கு வெளியேயுள்ள இந்தப் புதிய கட்டமைப்பானது பொருளாதாரம்,பாதுகாப்பு, ஊடகம் மற்றும் வாழ்வின் எல்லா அம்சங்களிலும் அதிகாரத்தையும் கட்டுப்பாட்டையும் பிரயோகிக்க அவர்களுக்கு அனுமதி வழங்குகின்றது.

குடும்பம்

இதனைவிட,ஜனாதிபதியின் மூன்று சகோதரர்கள் நாட்டை கொண்டு நடத்துவதில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார்கள்:

– மகிந்த ராஜபக்ச பிரதமர் மற்றும் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சராகவும் ,புத்தசாசன , கலாச்சார மற்றும் சமய விவகார அமைச்சராகவும், நகர அபிவிருத்தி ,நீர் விநியோகம் மற்றும் வீட்டு வசதிகள் அமைச்சராகவும், மற்றும் சமுதாய அதிகார மற்றும் தோட்ட உட்கட்டுமான அபிவிருத்தி அமைச்சராகவும் உள்ளார்.

– சமால் ராஜபக்ச பாதுகாப்பமைச்சராகவும், மகாவலி, விவசாய நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர்,உள்ளக வியாபார , உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் அமைச்சராக உள்ளார்.

– பசில் ராஜபக்ச பொருளாதார செயலணியை தலைமைதாங்குகின்றார். கடந்த அரசாங்கத்தின் கீழ் ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காக ஐந்து வழக்குகளில் அவர் விசாரணை செய்யப்பட்டார். அவர் அமெரிக்க இலங்கை என இரட்டை குடியுரிமையைக் கொண்டவர்,அவர் தேர்தலில் தெரிவு செய்யப்படவில்லை ஆனால் ஜனாதிபதியின் விசேட தூதுவராகச் செயற்படுகின்றார்.

செயலணிகள் நியமிக்கப்பட முன்னர் , ராஜபக்ச சகோதரர்கள் 145 அரச நிறுவனங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக அதிலும் 88 மாத்திரம் மகிந்த ராஜபக்சவின் கைகளில் உள்ளன என உள்ளூர் செய்தி அறிக்கைகள் தெரிவித்தன. கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனமானது “ அரச நிறுவனங்களின், கூட்டுத்தாபனங்களின் மற்றும் சட்ட அமைப்புக்களின் தலைவர்களின் அனைத்து நியமனங்களும் மற்றும் பணிப்பாளர்கள் சபையின் நியமனங்களும் தகுதி மற்றும் தலைமைத்துவ திறமைகளை அடிப்படையாக கொண்டதாக இருக்கும்” என உறுதியளிக்கிறது.

உறவினர் ஆதரவுக் கொள்கை , ஆதரவு மற்றும் இராணுவமயமாக்கல் என்பன தேர்தல்களைத் தொடர்ந்து அதிகாரம் பலப்படுத்தப்பட்ட இலங்கையில் புதிய அரசாங்கத்தின் குணாம்சங்களாக உள்ளன.

முற்றும்

ஜனாதிபதி செயலணிகளின் பட்டியல்

1. வறுமை ஒழிப்பு மற்றும் வாழ்வாதார அபிவிருத்திக்கான செயலணி
2. முழுமையான சமுதாய வாழ்க்கைக்கான ஆதரவுக்காக தொடர்ச்சியான சேவைகள் வழங்கப்படுவதை வழிநடத்துதல்ää ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணிப்தற்கான ஜனாதிபதி ஆணைக்குழு
3. 1 மற்றும் 2 மாற்றியமைக்கப்பட்டுள்ளது: பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி ஆணைக்குழு
4. முப்படையைச் சேர்ந்த உறுப்பினர்கள் மத்தியில் கொரணா வைரஸ் தொற்றினைத் தடுப்பதற்கு எல்லா ஆயுதப்படைகளும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆய்வு செய்தல் மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்குவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு.
5. இலங்கையின் கல்வி விவகாரங்களுக்கான செயலணி
6. பாதுகாப்பான நாட்டையும் கட்டுப்பாடான ஒழுக்கமான மற்றும் சட்ட ரீதியான சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணி
7. கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் பாரம்பரிய முகாமைத்துவத்திற்கான ஜனாதிபதி செயலணி
8. பலநோக்கு அபிவிருத்தி செயலணி ( இது ஒரு ஜனாதிபதி செயலணி இல்லை ஆனால் ஜனாதிபதியால் உருவாக்கப்பட்டது)

SOOKA போர்க்குற்றம் சாட்டப்பட்ட படையினர்,மோசமான ஊழல்வாதிகள்,உறவினரைக் கொண்ட கோத்தபாய அரசு

 

 

 

PDF தமிழ் வடிவம் 

http://www.ilakku.org/wp-content/uploads/2020/07/ITJP-Tamil-Merged7-July-2020-PTF-release-1.pdf

 

Exit mobile version