இந்து மதத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பது தொடர்பில் ஆராய வேண்டும்-ரணில்

இலங்கையிலுள்ள இந்து மதத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பது தொடர்பில் ஆராய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் (29) விசேட உரையாற்றுகையில்,

இந்து ஆலயங்களில் மாத்திரமன்றி, பௌத்த விஹாரைகளிலும் இந்து தெய்வங்களை வழிபட்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் சிவ வழிபாடு பொதுவானது என்பதுடன், இலங்கையின் தென் பகுதியில் விஷ்ணு கடவுளை வழிபடுவது பொதுவாகக் காணப்படுகின்றது.

தென் பகுதியில் பல இந்து கடவுள்களை மக்கள் வழிபட்டு வருகின்றனர். விஷ்ணு, முருகன், பத்தினி (அம்மன்) உள்ளிட்ட பல தெய்வங்களை, தென் பகுதியில் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

இந்தியாவிலுள்ள இந்து மதத்திற்கும் இலங்கையிலுள்ள இந்து மதத்திற்கும் இடையில் தனித்துவங்கள் காணப்படுகின்றன. இலங்கையிலுள்ள இந்து மதம் குறித்து, அறிக்கையொன்றை தொகுத்து வழங்குமாறு, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் நான் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்த நடவடிக்கைகளுக்கு ஏனைய கட்சிகளும் உதவிகளை வழங்க வேண்டும் என ஜனாதிபதி பகிரங்க கோரிக்கை விடுக்கின்றார். அத்துடன், வட இந்தியாவிற்கும் தென் இந்தியாவிற்கும் இடையில் இந்து மதத்திற்கு வித்தியாசம் காணப்படுகின்றது”  என்றார்.