“இலங்கை அகதிகள் குறித்து உணர்ச்சிபூர்வமாக முடிவெடுக்க முடியாது” – இந்திய அரசு

1 “இலங்கை அகதிகள் குறித்து உணர்ச்சிபூர்வமாக முடிவெடுக்க முடியாது” - இந்திய அரசு

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் விவகாரத்தில், “இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள். எனவே அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் விஷயத்தில் உணர்ச்சிபூர்வமாக முடிவெடுக்க முடியாது. சட்டத்திற்குட்பட்டே முடிவெடுக்க முடியும்” என இந்திய அரசு மதுரைக் கிளை  தெரிவித்துள்ளது.

திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து முடிவெடுக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசு சார்பில் மேல்முறையீட்டு வழக்கு பதியப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணையில் இந்த அரசு தனது வாதத்தை மேற்குறிப்பிட்டவாறு முன்வைத்துள்ளது.

ilakku-weekly-epaper-144-august-22-2021