Tamil News
Home ஆய்வுகள் ஈழத்தமிழர் இறைமையை ஒடுக்க யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 42வது ஆண்டு

ஈழத்தமிழர் இறைமையை ஒடுக்க யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்ட 42வது ஆண்டு

இன்று ஆசியாவில் 2வது பெரிய நூலகம் என 1981இல் திகழ்ந்து கொண்டிருந்த யாழ்ப்பாண நூலகத்தைச் சிறிலங்கா அரசாங்கம் அரசபயங்கரவாதத்தின் மூலம் எரித்தழித்துப் பண்பாட்டு இனஅழிப்பை நடாத்திய 42வது ஆண்டு நினைவேந்தல் நாள்.

சிறிலங்காவின் அக்கால ஐக்கிய தேசியக் கட்சியின் கைத்தொழில் அமைச்சர் சிறில் மத்தியூவும், காணி மகாவலி அபிவிருத்தி அமைச்சர் லலித் அத்துலத் முதலியும் இவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 300 பொலிசாருடன் 1981ம் ஆண்டு யூன் மாதம் 4ம் திகதிய யாழ்ப்பாண மாவட்டசபை தேர்தலுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தவென மே மாதம் 31ம் நாள் யாழ்ப்பாணம் வந்தடைந்து யாழப்பாண நூலகத்துக்கு பக்கமாக இருந்த துரையப்பா விளையாட்டரங்கில் முகாமிட்டனர்.

இவர்களால் தேர்தல் அலுவலர்களாகத் தேர்தல் திணைக்களத்தால் நியமிக்கப்பட்ட 150 அதிகாரிகள் தடுக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக இவர்களால் தாக்குதல் பயிற்சிகள் அளிக்கப்ட்ட 150 சிங்களக் காடையர்கள் தேர்தல் அலுவலகர்களாக யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்ட்டிருந்தனர். இந்தப் பின்னணியில் இந்த இரு அமைச்சர்களும் நெறிப்படுத்த1981 மே மாதம் 31ம் நாள் நள்ளிரவு தாண்டி யூன் மாதம் 1ம் நாள் தொடங்கியதும் மிகப்பெரிய அழகான கட்டடிடக்கலையமைப்புடன் விளங்கிய 90000 நூல்கைளக் கொண்டதும் கேட்போர் கூடம் சிறுவர் நூலகப் பகுதி ஆதியனவற்றைக் கொண்டதுமான யாழ்ப்பாண நூலகம் சிங்களக் காடையர்களால் எரியூட்டப்பட்டது.

தீயை அணைக்க விரைந்து ஓடி வந்த பொதுமக்களைச் சிறிலங்காப் பொலிசார் எரிகின்ற கட்டிடத்தை நெருங்கவிடாது அடித்தும் துப்பாக்கிப் பிரயோகம் செய்தும் கலைத்துத் துரத்தினர். இதனால் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல தமிழகம் உட்பட்ட உலகத் தமிழர்களுக்கும் தமிழ்ப்பண்பாட்டுக் கலாச்சார நகரமாக விளங்கிய யாழ்ப்பாணத்தின் மீது சிறிலங்காக அரசபயங்கரவாதத்தின் முதல் தீ வைக்கப்பட்டதும் அல்லாமல் அடுத்து வந்த மூன்று நாட்களிலும் யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிவேலு யோகேஸ்வரனின் இல்லம் எரிக்கப்பட்டு யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினரே உயிர் பிழைக்க அனைத்தையும் இழந்து வீட்டுப் பின் மதில் பாய்ந்து ஓடி ஈழத்தமிழர்கள் அரசியல் புகலிடம் கேட்டு ஓடத் தொடங்கும்’ வரலாறும் தொடக்கமுற்றது.

கூடவே யாழ்ப்பாண நன்னகரின் 100 கடைகள் உடைக்கப்பட்டுக் கொள்ளையடிக்கப்பட்டதும் அல்லாமல் மரபுநிலை வர்த்தகம் செய்த கடைகள் எரித்தும் அழிக்கப்பட்டன. இவ்வாறு ஈழத்தமிழர்களின் இந்த மண் எங்களின் சொந்த மண் என்கிற அவர்களின் இறைமையை ஒடுக்கி அவர்கள் தங்களுடைய வாழ்வையும் அரசியல் எதிர்காலத்தையும் தாங்களே அமைத்து வாழ்வதற்கான அவர்களின் தன்னாட்சி உரிமையையும் படைபலத்தாலும் அரசபயங்கரவாதத்தாலும் அழிக்கும் மக்கள் மேலான யுத்தத்தையும் சிறிலங்கா கட்டவிழ்த்து விட்ட 42வது ஆண்டில் ஈழத்தமிழ் மக்கள் தங்கள் உயிரையும் உடலையும் உடமைகளையும் பாதுகாக்கத் தாங்கள் ஆயுத எதிர்ப்பை வெளிப்படுத்தி தங்களுக்கான நடைமுறையரசை 1978 முதல் கட்டமைக்கத் தொடங்கியதற்கு இனங்காணக்கூடிய அச்சத்தை ஏற்படுத்தி மக்களைப் பழிவாங்கும் செயலாகச் சிறிலங்கா இந்த மக்கள் மேலான யுத்தத்தையும் பண்பாட்டு இனஅழிப்பையும் நடாத்தியது என்பதே வரலாறு கூறும் உண்மையாக உள்ளது. ஆயினும் இன்று 42 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் ஈழத்தமிழகத்தில் இன்னமும் பண்பாட்டு இனஅழிப்பு சிறிலங்காவால் தொடர்ந்த வண்ணமே உள்ளதைப் பௌத்த விகாரங்களைத் தமிழரின் தனியார் நிலங்களிலும் சைவ கிறிஸ்தவ ஆலயங்களுக்கு அருகிலும் சிறிலங்கா அமைத்து வருவது தெளிவாக்குகிறது.

1981 இல் யாழ்ப்பாண நூலக எரிப்புக்குத் தலைமைதாங்கிய ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர் சிறில் மத்தியூ அவ்வாண்டில் எழுதிய ளுinhயடய Pநழிடந – யுறயமநஇ யுசளைநஇ ளுயகந புரயசன டீரனனாளைஅ என்னும் நூலே புத்த புனிதத் தலங்கள் யாழ்ப்பாணத்தில் உள்ளன அவற்றை மீட்க சிங்களவர்கள் முஸ்லீம்கள் புனிதப் போர் ஜிகாத்தை செய்வது போல பௌத்தத்தைப் பாதுகாக்க யாழ்ப்பாணத்தின் மேல் புனிதப்போர் தொடங்க வேண்டுமென சிங்கள பௌத்த பேரினவாதத் தீயைச் சுடர்விட்டு எரிய வைத்ததும் அல்லாமல் இவரே 1983 ஆடி ஈழத்தமிழின அழிப்புக்குத் தலைமைதாங்கி கொழும்பு உட்பட வடக்கு கிழக்குக்கு வெளியே தமிழர்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம் ஈழத்தமிழர்களை இனஅழிப்பு செய்வித்தார் என்பது வரலாறு. லலித் அத்துலத் முதலியும் பாதுகாப்பு அமைச்சராகத் தமிழர் தாயகத்தின் மேலும் ஈழத்தமிழ் மக்கள் மேலும் மக்கள் மேலான யுத்தத்தை வளர்த்து ஈழத்தமிழர்களை இனஅழிப்பு செய்தார் என்பதும் வரலாறு. இந்நிலையில் இன்று 42 ஆண்டுகள் கழிந்த நிலையிலும் ஈழத்தமிழரின் இறைமைக்கான பாதுகாப்பும் தன்னாட்சி உரிமையைப் பயன்படுத்தி வாழ்வதற்கு உத்தரவாதமும் இல்லாத நிலையில் ஈழத்தமிழர்கள் உயிருக்கான இனங்காணக் கூடிய அச்சுறுத்தல இனனமும் தொடர்வதை உலகத் தமிழர்களாக இன்று உலகின் பலம்வாய்ந்த கட்டமைப்பான புலம் பதிந்து வாழும் தமிழர்கள் எவ்வளவு காலத்திற்கு அனுமதிக்கப் போகின்றார்கள் என்பதே இன்று எம்முன்னுள்ள கேள்வி?

Exit mobile version