ஜெனிவாவில் நடப்பது மனித உரிமை விவகாரமா? அரசியலா? அமைச்சர் பீரிஸ் கேள்வி

ஜெனிவாவில் நடப்பது மனித உரிமை விவகாரமாஜெனிவாவில் நடப்பது மனித உரிமை விவகாரமா: “ஒவ்வொரு வருடமும் ஜெனிவாவில் இலங்கை குறித்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றமையிட்டு அதிர்ச்சி யடைகின்றோம். இதற்கு உண்மையான காரணம் என்ன என்கின்ற பிரச்சனை எழுகின்றது. உண்மையில் இது மனித உரிமைகளுடன் சம்பந்தப்பட்டதா? அதற்கு அப்பாலான அரசியல் நிகழ்ச்சி நிரலா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கின்றார் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்.

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஊடக சந்திப்பு கொழும்பு பத்தரமுல்லை நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற போதே பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இவ்வாறு கேள்வி எழுப்பினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது;

“கடந்த சில வாரங்களாக சர்வதேச ரீதியில் இலங்கைக்கு மிக முக்கியமான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. செப்டம்பர் 12ம் திகதி ஐ.நா மனித உரிமைப் பேரவை ஜெனிவா நகரில் கூடுகின்றது. செப்டம்பர் 21ஆம் திகதி ஐ.நா பொதுச் சபைக் கூட்டம் நியூயோர்க் நகரில் கூடுகின்றது. இவ்விரண்டு மாநாடு களிலும் நாம் எமது நாட்டிற்கான அனைத்து நலன்களையும் பெற எதிர்பார்க் கின்றோம்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கான சர்வதேச நினைவு தினமும், தமிழ் மக்களுக்கான நீதியும்

எமது நிலைப்பாடு பற்றி விலாவாரியாக நாம் தெளிவு படுத்தியிருக்கின்றோம். அந்த நாடுகளிலுள்ள இலங்கையின் தூதுவர்களான மொஹான் பீரிஸ் மற்றும் சி.ஏ சந்திரபிரேம ஆகியோர் மூலமாக இந்தத் தெளிவுபடுத்தலை செய்துள்ளோம். இதற்கு மேலாக கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களை தனித்தனியாக சந்தித்து ஜெனிவா கூட்டத் தொடருக்குத் தொடர்புடைய விடயங்களையும், தெளிவு படுத்தலையும் வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில் நான் செய்துள்ளேன்.

இதுகுறித்து நாம் நிச்சயம் கேட்க வேண்டிய கேள்விகள் சில உள்ளன. இன்று உலகின் நிலைமை பற்றி நாம் சிந்தித்தால், குறிப்பாக தெற்காசிய வலயத்தில் பல்வேறு நெருக்கடிகள் உள்ளன. இந்த நிலைமை ஊடாக உலக மக்களுக்கு மேலதிகமான பாரதூரப் பிரச்சினைகளும் தலைதூக்குகின்றன. மனிதப் படுகொலை, குண்டு வெடிப்புகள், நிலையற்ற தன்மை, துப்பாக்கி, ஆயுதப் பிரச்சினைகள், அகதிகள், தீவிரவாதம் என பிரச்சினைகளும் இந்த வலயத்தில் அண்மையில் இடம்பெற்ற சில சம்பவங்களினால் ஏற்படுகின்றன.

எமது நாட்டினால் ஏனைய நாடுகளுக்கோ, எவருக்கும் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. எனினும் ஒவ்வொரு வருடமாக ஜெனீவா நகரில் இலங்கை பற்றி விமர்சித்து, பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றமையிட்டு அதிர்ச்சி யடைகின்றோம். இதற்கு உண்மையான காரணம் என்ன என்கின்ற பிரச்சனை எழுகின்றது. இதில் நீதி உள்ளதா? பேச்சு நடத்தபல பிரச்சினைகள் உள்ள நிலையிலும், இலங்கையை தெரிவுசெய்து ஏன் இவ்வாறு பேச்சு நடத்துகின்றார்கள் என்கின்ற கேள்வியை நாம் கேட்க வேண்டும் என நினைக்கின்றேன். உண்மையில் இது மனித உரிமைகளுடன் சம்பந்தப்பட்டதா? அல்லது அதற்கு அப்பாலான அரசியல் நிகழ்ச்சி நிரலா?

ilakku-Weekly-Epaper-145-August-22-2021