Home செய்திகள் கொரோனா வைரஸின் புதிய திரிபு குறித்து மருத்துவர் சந்திம ஜீவந்தர கருத்து

கொரோனா வைரஸின் புதிய திரிபு குறித்து மருத்துவர் சந்திம ஜீவந்தர கருத்து

ஒமிக்ரோன் அதிகமாக பரவக்கூடியதா?

டெல்டா உட்பட ஏனைய வகைகளுடன் ஒப்பிடுகையில், ஒமிக்ரோன் அதிகமாக பரவக்கூடியதா? ஒருவரிடமிருந்து மற்றுமொருவருக்கு எளிதில் பரவுகிறதா? என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என  ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையின் தலைவரான மருத்துவர்  சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் தளத்தில், “புதிய பிறழ்வின் நோயின் தீவிரத் தன்மையை பொறுத்தவரை, டெல்டா உள்ளிட்ட பிற வகைகளுடன் ஒப்பிடும்போது ஒமிக்ரோன் தொற்று மிகவும் கடுமையான நோயை ஏற்படுத்துமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

புதிய பிறழ்வின் தாக்கம் தொடர்பில் கண்டறிய சோதனையின் செயற்திறனை அதிகரிக்க வேண்டும்.ஏனைய பிறழ்வுகளை கண்டறிவதற்காக பயன்படுத்தும் பிசிஆர் சோதனைகளின் ஊடாக ஒமிக்ரோன் பிறழ்வினையும் கண்டறிய முடியும்.

விரைவான என்டிஜென் கண்டறிதல் சோதனைகள் உட்பட பிற வகை சோதனைகளின் ஊடாக இதன் தாக்கத்தை மதிப்பிடுவதற்கான ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன”  என  பதிவிட்டுள்ளார்.

Exit mobile version