புதிய மலேரியா தடுப்பு மருந்து அறிமுகம்

மலேரியா நோய் வராமல் முன்கூட்டியே பாதுகாப்பை பெறும் முகமாக புதிய தடுப்பு மருந்து ஒன்றை பிரித்தானியாவின் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆரம்ப கட்ட பரிசோதனைகளில் இந்த தடுப்பு மருந்து 80 விகிதம் நோயை தடுக்கும் சக்தி கொண்டதாக அறியப்பட்டுள்ளது. எனவே அடுத்த வருடம் முதல் அதனை மக்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்து மிகவும் மலிவானது, ஒரு வருடத்திற்கு 100 மில்லியன் மருந்துகளை தயாரிப்பதற்கான வசதிகள் உள்ளன என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் காலங்களில் மலோரியாவினால் சிறுவர்கள் இறப்பது தடுக்கப்படும் என இது தொடர்பில் கருத்து வெளியிட்ட மலேரியாவை இல்லாது அழித்தல்; என்ற தொண்டு நிறுவன அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த தடுப்பு மருந்தை உருவாக்குவதற்கு 100 வருடங்களுக்கு மேல் எடுத்துள்ளது. நுளம்பினால் பரவும் இந்த நோய்க்கிருமி மனித உடலில் அடிக்கடி அதன் நிலையிடங்களை மாற்றுவதால் அதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் அதிக சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

புர்கினா பசோ என்ற ஆபிரிக்க நாட்டில் 409 சிறுவர்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இது 80 விகிதம் பலனைக் கொடுத்துள்ளது. இதுவே மிகவும் சிறந்த ஆய்வு முடிவு என தெரிவித்துள்ளார் ஜெனெர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் அன்றின் கில்.

இந்த வருடத்தின் இறுதியில் 4800 சிறுவர்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகள் வந்துவிடும் எனவே இந்த மருந்தை பயன்படுத்துவதற்கான அனுமதிகள் விரைவில் கிடைத்துவிடும்.

மலோரியாவினால் ஆண்டு தோறும் 400>000 மக்கள் இறக்கின்றனர், அவர்களில் அதிகமானவர்கள் சிறுவர்கள்.