இலங்கை மீனவர்கள் கத்தியைக் காட்டி தமிழக மீனவர்களை மிரட்டியதாக வழக்குப் பதிவு

தமிழக மீனவர்களை மிரட்டியதாக வழக்குப் பதிவு: தமிழக மீனவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டிய இலங்கை மீனவர்கள் ஜிபிஎஸ் கருவிகளை கொள்ளை அடித்ததாக போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். கோடியக்கரை அருகே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், கத்திமுனையில் மிரட்டுவதும் தொடர்கதையாகி வருகிறது. இலங்கை மீனவர்களின் ஆட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொடர்ந்து கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோடியக்கரை அருகே மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஆறுகாட்டுத்துறை பகுதியை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஆறு இலங்கை மீனவர்கள் கத்தியை காட்டி மிரட்டி, மீனவர்களிடம் இருந்து வாக்கி டாக்கி, ஜிபிஎஸ் கருவி உள்ளிட்ட அனைத்தையும் பறித்துக் கொண்டு அவர்களை விரட்டி அடித்துள்ளனர்.

அதன் மதிப்பு சுமார் 3 லட்சம் என பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இலங்கையை சேர்ந்த 6 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ilakku-Weekly-Epaper-145-August-22-2021