மட்டக்களப்பு: மாற்றுத்திரனாளிகள் நாட்டுக்கு பாரமானவர்களாக பார்க்கப்பட்டார்கள்-என்.மதிவண்ணன்

மாற்றுத்திரனாளிகள் நாட்டுக்கு பாரமானவர்களாக பார்க்கப்பட்டார்கள்

கடந்த காலத்தில் மாற்றுத்திரனாளிகள் நாட்டுக்கு பாரமானவர்களாக பார்க்கப்பட்டார்கள். இன்று அவர்களை நாங்கள் மற்றவர்களுடன் ஒன்றிணைத்திருக்கின்றோம். எதிர்காலத்தில் நாட்டுக்கு முன்னுதாரணமாகவும் பொருளாதார ரீதியில் பங்களிப்புசெய்யவேண்டிய தேவையும் மாற்றுத்திளனாளிகளுக்கு இருக்கின்றது என கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தின் பணிப்பாளர் என்.மதிவண்ணன் தெரிவித்தார்.

சர்வதேச மாற்றுத்திரனாளிகள் தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு “ஊனமுற்ற நபர்களின் தலைமைத்துவம் மற்றும் பங்கேற்பு உள்ளடக்கிய, அணுகக்கூடிய மற்றும் நிலையான கோவிட்-19 இற்குப் பிந்தைய உலகம்.” எனும் தொனிப்பொருளிற்கு அமைய கிழக்கு மாகாண “சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாள்.” மட்டக்களப்பில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றிய என்.மதிவண்ணன்,

“மாற்றுத்திறனாளிகள் அதிகமுள்ள மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் காணப்படுகின்றது. இதேபோன்று மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகளவான சேவையினை வழங்கும் மாவட்டமாகவும் இந்த மாவட்டம் காணப்படுகின்றது.

கடந்த காலத்தில் தொழில் தகைமைகளை பெற்றுக்கொள்வதற்காக மாற்றுத்திறனாளிகளுக்காக மாற்று ஓழுங்குகளையும் பரீட்சைகளும் மேற்கொள்ளப்பட்டன. அதில் இந்த மாவட்டத்தில் வெற்றியும் காணப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் மாற்றுத்திரனாளிகள் நாட்டுக்கு பாரமானவர்களாக பார்க்கப்பட்டார்கள். இன்று அவர்களை நாங்கள் மற்றவர்களுடன் ஒன்றிணைத்திருக்கின்றோம். எதிர்காலத்தில் நாட்டுக்கு முன்னுதாரணமாகவும் பொருளாதார ரீதியில் பங்களிப்புச் செய்யவேண்டிய தேவையும் மாற்றுத்திளனாளிகளுக்கு இருக்கின்றது” என்றார்.

1992 ஆம் ஆண்டிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையினால் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தொனிப்பொருளிற்கு அமைய டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி மாற்றுத்திறனாளிகள்  நாள் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad மட்டக்களப்பு: மாற்றுத்திரனாளிகள் நாட்டுக்கு பாரமானவர்களாக பார்க்கப்பட்டார்கள்-என்.மதிவண்ணன்