சிலிண்டர்களை மீளப் பெற வலியுறுத்தல்- இது வரையில் 63 சிலிண்டர்கள் வெடித்துள்ளதாக தகவல்

சிலிண்டர்களை மீளப் பெற வலியுறுத்தல்

சிலிண்டர்களை மீளப் பெற வலியுறுத்தல்: சமையல் எரிவாயுடன் தொடர்புடைய வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் அவசர ஆலோசனை உப குழு கூடி ஆராய்ந்துள்ள நிலையில், தரமற்ற வகையில் ஆபத்தான எரிவாயு சிலிண்டர்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டிருந்தால் அவற்றை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

அதே நேரம் இது வரையில் வடக்கு மற்றும் கிழக்கு உட்பட 63 சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சமையல் எரிவாயு சிலிண்டர்களில் சோப் நுரை மற்றும் பிற பொருட்களைப் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

சோப் நுரை மற்றும் ஏனைய பொருட்களைப் பயன்படுத்தி எரிவாயு சிலிண்டரை தனிப்பட்ட முறையில் பரிசோதிப்பது ஆபத்தான நிலை எனவும், கடையில் இருந்து வீட்டிற்கு எரிவாயு சிலிண்டரை கொண்டு வரும்போது சீல் வைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றும் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளரான ஜனக பத்திரத்ன தெரிவித்துள்ளார்.

ilakku Weekly Epaper 158 November 28 2021 Ad சிலிண்டர்களை மீளப் பெற வலியுறுத்தல்- இது வரையில் 63 சிலிண்டர்கள் வெடித்துள்ளதாக தகவல்